முகப்பு /செய்தி /இந்தியா / ”எதிர்பார்த்த ஒன்றுதான்” சட்ட ரீதியாக ராகுல் வெற்றி பெறுவார்: கார்த்திக் சிதம்பரம்

”எதிர்பார்த்த ஒன்றுதான்” சட்ட ரீதியாக ராகுல் வெற்றி பெறுவார்: கார்த்திக் சிதம்பரம்

கார்த்திக் சிதம்பரம்

கார்த்திக் சிதம்பரம்

Rahul Gandhi | ராகுல்காந்தி தகுதி நீக்கம் தொடர்பாக கார்த்திக் சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்

  • Last Updated :
  • Tamil Nadu, India

அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், எம்.பி.பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடியை விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த நிலையில், மக்களவை செயலாளர் உத்பால் குமார் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, சிறை தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. ஆக இருக்கும் நபர் இரண்டு அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றால் தகுதி நீக்கம் செய்யப்படுவர். அதனடிப்படையில், தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கேரளா மாநிலம் வயநாட்டில் போட்டியிட்டு ராகுல்காந்தி எம்.பி.ஆக தேர்ந்தேடுக்கப்பட்டார். இந்த நிலையில் ராகுல்காந்தி தகுதி நீக்கத்திற்கு காங்கிரஸ் கட்சியின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

top videos

    இது குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு போனில் பேசிய காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம், இந்த நேற்றே எதிர்ப்பார்த்தது தான் நாங்கள் சட்டரீதியாக போராடுவோம் என்றும் உச்சநீதிமன்றத்தில் நாங்கள் நாடி வெற்றி பெறுவோம் என தெரிவித்தார். இந்த வழக்கு உப்புக்கு சப்பு இல்லாத வழக்கு என்றும் இந்த வழக்கை எந்த ஒரு நீதிமன்றமும் அனுமதிக்காது என பேசியுள்ளார்.

    First published:

    Tags: Congress, Rahul Gandhi