நெட்வொர்க் 18 நடத்திய ரைசிங் இந்தியா நிகழ்வு டெல்லியில் மார்ச் 29, மார்ச் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்வேறு துறை சார்ந்த முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டு உலகளவில் இந்தியா ஏற்படுத்தியுள்ள மாற்றத்தைப் பற்றிக் கலந்துரையாடினர். இந்த நிகழ்ச்சியில் நடிகையும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பு சுந்தர் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், "எதற்காக ராகுல் காந்தியை பிரதமர் மோடி பழிவாங்க வேண்டும்? ராகுல் காந்தி பிரதமருக்கு ஈடாக முடியாது. 2013 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் அரசில் குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள் மேல்முறையீடு செய்தால் பதவி நீக்கம் ஏற்படாமல் இருக்க வழிவகை செய்யும் மசோதா கொண்டு வரப்பட்ட போது, பிரதமர் என்று கூட பார்க்காமல் மசோதா நகலை கிழித்தது ராகுல் காந்தி. எதற்காக காங்கிரசை பார்த்து நாங்கள் பயப்பட வேண்டும்?
உலகில் இரண்டாவது மிகப்பெரிய ஜனநாயக கட்சியாக பாஜக இருக்கும் போது யாருக்காகவும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. பாஜகவும், பிரதமர் மோடியும் ராகுல் காந்தியை பழிவாங்கும் வகையில் செயல்படுவது எனக் கூறுவது ஒரு அபத்தமான பொய். இது போன்ற பொய்களைக் கூறுவதை நினைத்து தனியாக இருக்கும்போது அவரே சிரித்துக் கொள்வார் என நினைக்கிறேன்" என்று கூறினார்.
மேலும், தேவையான எல்லா ஆதரவும் தற்போது கிடைக்கும் போது பெண்கள் பயமில்லாமல் நினைப்பதை கூறுவதற்கும், செய்வதற்கும் முன்வர வேண்டும். பெண்கள் முன்னேறுவதுவதற்கான சூழலும் களமும் தற்போது உள்ளதையும் நம்மால் காண முடிகிறது என்றார் குஷ்பு.
தேசிய மகளிர் ஆணையம் மூலம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது கூடுதல் நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருகிறோம். புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க தனியாக விசாரணைக் குழு ஒன்று தேசிய மகளிர் ஆணையத்தில் செயல்பட்டு வருகிறது. பெண்கள் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை முடிந்த வரையில் எடுப்போம் என்று குஷ்பு உறுதியளித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kushbu