மேலும் ஒரு பின்னடைவாக, ராகுல் காந்தி மீதான சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2019 நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையில், பிரதமர் மோடி, நிரவ் மோடி, லலித் மோடி குறித்து ராகுல் காந்தி பேசியது குறிப்பிட்ட சமூகத்தை அவமதிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அமர்வு நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, அவரது எம்.பி பதவியும் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, சிறைத் தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி ராகுல் காந்தி செய்த மேல்முறையீடு மனுவை சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், ராகுல் காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ராகுல் காந்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிக்வி, " மனுதாரர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சமூக தார்மீகத்தை சீர்குழைக்கும் வகையில் இல்லை. இவை பெரும்பாலும் கொள்தகா குற்றமாகவும் (non-cognizable), பிணையில் வெளி வரக்கூடியதாகவும் (Bailable) , தீவிரமில்லாத தன்மை (Non-serious Offence) உடையதாகவும் உள்ளது. எனவே, சிறைத் தண்டனையையை ரத்து செய்ய வேண்டும். மேலும், ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால், இந்த சிறைத் தண்டனை மீள முடியாத பாதிப்பை உருவாக்குவதாகவும் தெரிவித்தார்.
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கு கொள்ள முடியாததன் மூலம், மக்களின் குரலை பிரதிநிதித்துவம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தொகுதி மக்கள் தங்களுக்கான குரல்களை இழந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
இதையும் வாசிக்க: இடஒதுக்கீடு அளவை 75% ஆக அதிகரிப்போம்... காங்கிரஸ் முக்கிய வாக்குறுதி...!
எதிர் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர், "நீதிமன்றம் ராகுல் காந்தியை பதவி நீக்கம் செய்யவில்லை. நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்யப்பட்டது. எனவே, அவர் மீள முடியாத துயரை அனுபவிக்கிறார் என்பது தவறு. மேலும், "சிறைத் தண்டனை தனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு என்றும், மன்னிப்பு கோரா முடியாது என்றும் அவர் பொது வெளியில் பேசியுள்ளார். இதுதான், அவரின் வெளிப்படையான நிலைப்பாடு. எனவே, சிறைத் தண்டனையை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தை நாடுவது அவரின் போலித் தன்மையை காட்டுவதாகவும் தெரிவித்தார்.
அனைத்து வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஹேமந்த், தீர்ப்பை வேறொரு தேதிக்கு ஒத்தி வைத்தார். மேலும், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மீது இடைக்கால தடை விதிக்கவும் மறுத்து விட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rahul Gandhi