முகப்பு /செய்தி /இந்தியா / ராகுல் காந்திக்கு தண்டணை வழங்கிய நீதிபதி உள்ளிட்டோருக்கு அவசர கதியில் பதவி வழங்கியது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி

ராகுல் காந்திக்கு தண்டணை வழங்கிய நீதிபதி உள்ளிட்டோருக்கு அவசர கதியில் பதவி வழங்கியது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி

மாதிரி படம்

மாதிரி படம்

Rahul Gandhi Defamation Case | சீனியாரிட்டியை முறையாக பின்பற்றாமல் இட ஒதுக்கீடு மூலமாக பதவி உயர்வு வழங்குவது சட்ட விரோதமானது என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

ராகுல் காந்திக்கு தண்டணை வழங்கிய நீதிபதி உள்ளிட்ட 68 பேருக்கு அவசர கதியில் பதவி உயர்வு வழங்கியது குறித்து குஜராத் மாநில தலைமை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தண்டணை வழங்கிய நீதிபதி ஹரிஷ் வர்மாவுக்கு கூடுதல் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.இவருடன் சேர்த்து மேலும் 67 பேருக்கும் குஜராத் உயர்நீதிமன்ற பரிந்துரை அடிப்படையில், பதவி உயர்வு வழங்கப்படுவதாக கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி அம்மாநில அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.

இதனை எதிர்த்து குஜராத் நீதித்துறை அதிகாரிகள் ரவிக்குமார் மேத்தா மற்றும் சச்சின் மேத்தா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். சீனியாரிட்டியை முறையாக பின்பற்றாமல் இட ஒதுக்கீடு மூலமாக பதவி உயர்வு வழங்குவது சட்ட விரோதமானது என்று மனுவில் தெரிவித்திருந்தனர்.

இதையும் படிங்க: மூன்றாம் சார்லஸ் மன்னராக முடிசூட்டும் விழா : துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், நடிகை சோனம் கபூர் உள்ளிட்டோர் பங்கேற்பு

 இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு, அவசர கதியில் இந்தப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது ஏன் என்று கேள்வியெழுப்பியது. சீனியாரிட்டியை முறையாகப் பின்பற்றாதது ஏன் என்றும் கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து மாநில அரசு செயலர் நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

top videos
    First published:

    Tags: Rahul Gandhi, Supreme court