இந்தியாவில் மொத்தம் 3,167 புலிகள் இருப்பதாக அதிகாரபூர்வ எண்ணிக்கையை பிரதமர் மோடி வெளியிட்டார்.
கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தைப் பார்வையிட்ட பிரதமர் மோடி, தெப்பக்காடு, மசினக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுவிட்டு ஹெலிகாப்டர் மூலம் மைசூருவுக்கு சென்றார். project tiger என்ற திட்டம் தொடங்கியதன் 50ம் ஆண்டு விழாவை ஒட்டி நினைவு நாணயத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ’இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2,967-ல் இருந்து 3,167 ஆக உயர்ந்து உள்ளதாக கூறினார்.
உலகத்தில் உள்ள புலிகள் எண்ணிக்கையில் 75 விழுக்காடு இந்தியாவில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். புலிகளின் எண்ணிக்கை உயர்ந்த நிலையில், அதற்காக கர ஒலி எழுப்பவேண்டும் என்று விழாவில் பங்கேற்றவர்களை நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். விழாவில் பங்கேற்றவர்கள் எழுந்து நின்று கைதட்டியதால் அரங்கமே அதிர்ந்தது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.