முகப்பு /செய்தி /இந்தியா / தேர்தலில் இலவசக் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வேண்டும்- பிரதமர் மோடி

தேர்தலில் இலவசக் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வேண்டும்- பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சியே ஊழலின் ஆதாரமாக உள்ளது என்று பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.

  • Last Updated :
  • Karnataka, India

தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்கள் வழங்கப்படும் என்ற கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அம்மாநில பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில், காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

காங்கிரஸ் கட்சிக்கு ஊழலை ஒழிப்பதில் எந்த அக்கறையும் இல்லை என்றும், காங்கிரஸ் கட்சியே ஊழலின் ஆதாரமாக உள்ளது எனவும் விமர்சித்தார்.  2014ஆம் ஆண்டுக்கு பிறகு ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை நாடே கண்டுள்ளதாக குறிப்பிட்டார்.

பாஜக ஆட்சியில் கொண்டுவந்த ஜன்-தன், ஆதார் மற்றும் மொபைல் பணப்பரிவர்த்தனை உள்ளிட்டவை திரிசூலமாக மாறி ஊழலுக்கு பெரிய அடி கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

பிற கட்சிகள் ஆட்சியை பிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் போது, பாஜக மட்டும் தான், இந்தியாவின் வளர்ச்சியை நோக்கி சிந்திக்கிறது என்றும் பிரதமர் மோடி கூறினார்.

மேலும் ஏராளமான இலவசங்கள் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினால், மாநிலமே கடன் சுமையில் மூழ்கும் என்றும் பிரதமர் மோடி விமர்சித்தார்.

First published:

Tags: Karnataka Election 2023, Modi