முகப்பு /செய்தி /இந்தியா / மனதின் குரல் 100: சிறப்பான தருணங்களின் போட்டோ ஷேர் பண்ணுங்க - மோடி ட்வீட்

மனதின் குரல் 100: சிறப்பான தருணங்களின் போட்டோ ஷேர் பண்ணுங்க - மோடி ட்வீட்

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

மனதின் குரல் 100வது நிகழ்ச்சியைக் கேட்ட அனைவரும் சிறப்புத் தருணங்களின் படங்களைப் பகிருமாறு பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி மனதின் குரல் என்ற பெயரில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி வானொலி வாயிலாக உரையாற்றினர். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கும் தனது உரை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் வானொலி ஊடகத்தை பிரதமர் தேர்வு செய்தார். இந்நிகழ்ச்சிக்கு நாட்டு மக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுகிழமை பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி வானொலியில் ஒலிபரப்பானது. இதுவரை 99 அத்தியாயங்கள் ஒலிபரப்பாகி உள்ளன. இதில், பல்வேறு துறை சார்ந்த சாதனையாளர்கள் மற்றும் நாட்டிற்கு பங்களித்த எளிய மக்களின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் விரிவாகப் பேசினார்.

இதையும் படிக்க |  மனதின் குரல் 100: ''முதலில் நம் தேசத்தை பாருங்க..'' - பிரதமர் மோடி அட்வைஸ்!

குறிப்பாக தமிழ்நாட்டு பெண்கள் குறித்து பேசிய அவர், தமிழ்நாட்டின் பழங்குடியினப் பெண்கள் சூழலுக்கு உகந்த மண்குவளைகள் தயாரித்து வருகின்றனர். வேலூரில் 20,000 பெண்கள் ஒன்றிணைந்து நாக நதியை தூர்வாரி சீரமைத்து மீட்டெடுத்துள்ள பெருமைக்குரியது என்று பேசினார்.

நிகழ்ச்சிக்கு பிறகு ட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி 'மனதின் குரல்' 100 வது நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படங்களை பகிர பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ MannKiBaat100 -ல் இணைந்த இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு நன்றி . உண்மையிலேயே உற்சாகத்தால் மகிழ்ந்தேன்.

நிகழ்ச்சியைக் கேட்ட அனைவரையும் அந்தச் சிறப்புத் தருணங்களின் படங்களைப் பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் NaMo செயலி அல்லது https://mkb100.narendramodi.in என்ற இணைப்பு மூலம் இதைச் செய்யலாம்.” என பதிவிட்டுள்ளார்.

First published:

Tags: Mann ki baat, Narendra Modi