வரும் மக்களவைத் தேர்தலுக்குள், நாட்டில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், கடந்தாண்டு ரோஜ்கர் மேளா இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 75 ஆயிரம் பேருக்கு மத்திய அரசு பணிகளுக்கான பணி ஆணை வழங்கப்பட்டது. இந்நிலையில், 71 ஆயிரம் பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்கினார்.
காவல் ஆய்வாளர், சுருக்கெழுத்தர், அஞ்சல் உதவியாளர், வருவாய்த்துறை ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் பணிகளுக்கும் தேர்வானவர்களுக்கு இந்த ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. சென்னை அம்பேத்கர் அரங்கத்தில் இருந்து நூற்றுக்கணக்கானோர் காணொலி மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில், மத்திய சிறுபான்மை விவகாரங்களுக்கான அமைச்சர் ஜான் பர்லா கலந்துகொண்டு, சென்னையில் 267 நபர்களுக்கு பணி ஆணைகள் வழங்கினார்.
இதையும் படிங்க; தமிழகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதி கேட்ட ராஜேந்திர பாலாஜி... நிராகரித்த உச்சநீதிமன்றம்..!
தொடர்ந்து, காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, ஆத்ம நிர்பார் திட்டம் நாட்டின் கிராமங்கள் தொடங்கி நகரங்கள் வரை வேலை வாய்ப்பை உருவாக்கி உள்ளதாக கூறினார். பொம்மை தயாரிப்பு தொழில் மேம்படுத்தப்பட்டு புதிய வாய்ப்புகளை வழங்குவதாகவும், பாஜக ஆளும் மாநிலங்களில் அரசு வேலை வழங்குவது விரைவாக செயல்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். புதிதாக பணியில் சேர்பவர்கள், பொதுமக்களுக்கு மோசமான அனுபவத்தை கொடுத்துவிடக் கூடாது என்றும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Employment, PM Modi