கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி மனதின் குரல் என்ற பெயரில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி வானொலி வாயிலாக உரையாற்றினர். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கும் தனது உரை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் வானொலி ஊடகத்தை பிரதமர் தேர்வு செய்தார். இந்நிகழ்ச்சிக்கு நாட்டு மக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுகிழமை பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி வானொலியில் ஒலிபரப்பானது. இதுவரை 99 அத்தியாயங்கள் ஒலிபரப்பாகி உள்ளன. இதில், பல்வேறு துறை சார்ந்த சாதனையாளர்கள் மற்றும் நாட்டிற்கு பங்களித்த எளிய மக்களின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் விரிவாகப் பேசி வருகிறார்.
இதையும் படிக்க | மனதின் குரல் 100: தமிழ்நாட்டு பெண்கள் குறித்து பிரதமர் மோடி புகழாரம்
நிகழ்ச்சியில் பேசிய அவர், “மக்களுடன் நான் இணைவதற்கு ஒரு தீர்வாக அமைந்ததுதான் இந்த மனதின் குரல் நிகழ்ச்சி; இது ஒரு நிகழ்ச்சி என்பதை தாண்டி, எனக்கான நம்பிக்கை மற்றும் ஆன்மீக பயணமாகவே கருதுகிறேன்” என்றார்.
தொடர்ந்து பேசுகையில், "நாம் அயல்நாடுகளுக்குச் சுற்றுலா மேற்கொள்வதற்கு முன்பாக, முதலில் நமது தேசத்தில் குறைந்த பட்சம் 15 சுற்றுலா இடங்களுக்கக் கண்டிப்பாக பார்க்க வேண்டும். நமது இயற்கை ஆதாரங்களாகட்டும், நதிகள், மலைகள், குளங்கள் அல்லது நமது புனிதத் தலங்களாகட்டும், இவற்றைத் தூய்மையாக வைத்திருப்பது அவசியமானது. இவை சுற்றுலாத் தொழிலுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்" என்றும் அவர் பேசினார்.
மேலும் அவர் பேசுகையில், “மனதின் குரலை வழிநடத்தும் பாரத நாட்டு மக்கள், நாட்டின் மீது நம்பிக்கை வைத்திருப்போர் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.” என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mann ki baat, PM Narendra Modi