முகப்பு /செய்தி /இந்தியா / 'உலகத்துக்கே ஆச்சரியம்தான்' - ஹிஸ்டரி டிவியின் 'தி வயல்' ஆவணப் படம் குறித்து பிரதமர் மோடி!

'உலகத்துக்கே ஆச்சரியம்தான்' - ஹிஸ்டரி டிவியின் 'தி வயல்' ஆவணப் படம் குறித்து பிரதமர் மோடி!

மனோஜ் பாஜ்பாய் - நரேந்திர மோடி

மனோஜ் பாஜ்பாய் - நரேந்திர மோடி

இந்தியாவைப் போன்ற ஒரு பெரிய நாடு இத்தனை நாட்கள் லாக்டவுனை எப்படி சமாளித்தது என்று உலகத்திற்கே ஆச்சர்யமாக இருந்திருக்கும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

உலக அளவில் மிகப்பெரிய கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் திட்டமாக இந்தியாவின் கொரோனா தடுப்பு மருந்து வழங்கல் இருந்தது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல சவாலான சூழ்நிலைகளை கடந்து வெற்றிகரமாக இத்திட்டத்தை முடித்தது. கொரோனா பாதிப்பு நேரத்தின்போது உலகத்திற்கே தடுப்பூசிகளை வழங்கி இந்தியா அளப்பரிய உதவிகளை உலக நாடுகளுக்குச் செய்தது.

பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் பலன் அளித்தன. அந்த வகையில், கொரோனா தடுப்பு மருந்தின் பயணத்தை ஆவணப்படுத்தும் நோக்கில் ‘தி வயல்’ என்ற ஆவணப்படத்தை ஹிஸ்டரி டிவி18 சேனல் உருவாக்கியுள்ளது.

இந்த ஆவணப்படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தி திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் மனோஜ் பாஜ்பாய் இந்த ஆவணப்படத்தில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு குறித்து விவரிக்கிறார். முதன் முறையாக பிரதமர் மோடியின் பேச்சை உள்ளடக்கியதாக இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததாவது, “ஆரம்பத்தில், இந்தியா வைரஸிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டது என்பது உண்மைதான், ஆனால் இன்று, உலகம் மிகவும் சிறியதாக மாறியிருக்கிறது. உலக நாடுகள் ஒன்றோடொன்று தொடர்புடையதாகவும் ஒன்றுக்கொன்று சார்ந்துள்ளதாகவும் மாறியிருக்கிறது. கொரோனா தொற்று உலகின் பிற பகுதிகளுக்கு மட்டுப்படுத்தப்படும் என்றும் இந்தியாவை ஒருபோதும் தாக்காது என்று கருதுவது முட்டாள்தனம் என்று என் மனதில் தோன்றிய முதல் எண்ணமாக இருந்தது, ”என்று பிரதமர் கூறினார். இந்த கொரோனா அச்சுறுத்தலில் இருந்து விடுபட நாம் நம்மை பாதுக்காத்துக்கொள்ள வேண்டும். இதை மக்களுக்கு என்னால் புரிய வைக்க முடிந்தது.

இந்தியாவைப் போன்ற ஒரு பெரிய நாடு இத்தனை நாட்கள் லாக்டவுனை எப்படி சமாளித்தது என்று உலகத்திற்கே ஆச்சர்யமாக இருந்திருக்கும். உலகில் வேறு எந்த நாடும் தனது குடிமக்களை அந்த திசையில் கொண்டு செல்ல முடியாது என்று பேசினார்.

First published:

Tags: CoronaVirus, Narendra Modi, The Vial