முகப்பு /செய்தி /இந்தியா / தீவிரவாதத்தின் பாதிப்புகளைக் காட்டியுள்ளது - தி கேரளா ஸ்டோரி படத்துக்கு பிரதமர் ஆதரவு

தீவிரவாதத்தின் பாதிப்புகளைக் காட்டியுள்ளது - தி கேரளா ஸ்டோரி படத்துக்கு பிரதமர் ஆதரவு

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு பிரதமர் மோடி ஆதரவு தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Karnataka, India

விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது. இந்ததிரைப்படத்தில் அடா சர்மா, சித்னி இட்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கேரளாவை சேர்ந்த 4 பெண்கள் கல்லூரி விடுதியில் ஒரே அறையில் தங்குகின்றனர். அவர்களில் ஒருவர் இஸ்லாம் பெண். மற்றவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு இஸ்லாம் மதத்துக்கு மதமாற்றம் செய்யப்படுவதாகவும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்காக சிரியா போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் ட்ரெய்லரில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கேரளாவை சேர்ந்த 32,000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டனர் என்றும் ட்ரெய்லரில் கூறப்பட்டிருக்கிறது. இந்த ட்ரைலர் வெளியானதிலிருந்தே சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கைவைத்துவருகின்றனர்.

மேலும், இந்தப் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேரளா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. பலத்த எதிர்ப்புகளுக்கு தி கேரளா ஸ்டோரி படம் இந்தியா முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டிலும் இந்தி பதிப்பு மட்டும் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில், கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘அழகான, உழைப்பாளி, திறமையான, அறிவான மக்களைக் கொண்ட கேரளா போன்ற சமூகத்தில் நிலவும் தீவிரவாதத்தின் பாதிப்புகளை வெளிப்படுத்த தி கேரளா படம் முயற்சி செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி தற்போது அந்தப் படத்தை தடை செய்ய முயற்சி செய்கிறது தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு நான் ஜெய் பஜ்ரங் பலி என்று கோஷமிடுவது கூட பிரச்னைதான்.

”ஒரு படத்தால் ஒன்றும் ஆகிவிடாது..” - தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை விதிக்க மறுத்த கேரள உயர்நீதிமன்றம்..!

சமூகத்தில் நிலவும் புதிய தன்மைக் கொண்ட தீவிரவாதத்தை எடுத்துக் காட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும்போது தீவிரவாத குழுகளுக்கு முன் மண்டியிட்டிருந்தது. நீண்ட காலம் நீடித்த வன்முறையின் காரணமாக நாம் பாதிக்கப்பட்டிருந்தோம். தீவிரவாதத்திலிருந்து காங்கிரஸ் நம்மைப் பாதுகாக்கவில்லை’ என்று விமர்சனம் செய்திருந்தார்.

First published:

Tags: Modi