முகப்பு /செய்தி /இந்தியா / தோக் பிசின் மொழியில் திருக்குறள்... பப்வா நாட்டு பிரதமருடன் சேர்ந்து வெளியிட்ட மோடி..

தோக் பிசின் மொழியில் திருக்குறள்... பப்வா நாட்டு பிரதமருடன் சேர்ந்து வெளியிட்ட மோடி..

மோடி

மோடி

உலகப் பொதுமறையாம் திருக்குறளை தோக் பிசின் மொழியில் பிரதமர் மோடி வெளியிட்டார்.

  • Last Updated :
  • internation, Indiapapua new guinea

ஜப்பான், பப்வா நியூ கினி, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகள் பயணத்தின் முதல் கட்டமாக, ஜப்பானுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அங்கு ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட அவர், உக்ரைன் அதிபர், பிரிட்டன் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசினார். மேலும், குவாட் மாநாட்டிலும் பங்கேற்றார்.

பின்னர் அணிவகுப்பை பிரதமர் ஏற்றுக் கொண்டார். பின்னர், அங்கிருந்து பப்புவா நியூ கினியாவிற்குச் சென்றார். அங்கு சென்ற பிரதமர் மோடியை பப்வா நியூ கினியா நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராப்பே வரவேற்றார். அங்கு அந்நாட்டு மொழியில் திருகுறள் மொழி பெயர்ப்பு செய்து வெளியிடப்பட்டது. அதனை பிரதமர் மோடி வெளியிட்டார்.

இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், ‘பப்புவா நியூ கினியாவில், டோக் பிசின் மொழியில் திருக்குறளை வெளியிட்ட பெருமை எனக்கும் பிரதமர் ஜேம்ஸ் மராப்பேவிற்கும் கிடைத்தது. குறள் ஒரு தலைசிறந்த படைப்பு, இது பல்வேறு துறைகளில் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது.

கரூரில் தயாரிக்கப்பட்ட மறுசுழற்சி ஆடை... ஜப்பான் மாநாட்டில் மோடி அணிந்தது பெருமிதம்- ஆடை உற்பத்தியாளர்

குறளை தோக் பிசின் மொழியில் மொழி பெயர்க்க எடுத்த முயற்சிக்காக மேற்கு புதிய பிரிட்டன் மாகாண ஆளுநர் சசீந்திரன் முத்துவேல் மற்றும் சுபா சசீந்திரன் ஆகியோரைப் பாராட்டுகிறேன். ஆளுநர் சசிந்திரன் தனது பள்ளி படிப்பை தமிழில் கற்று தேர்ந்துள்ளார். சுபா சசிந்திரன், சிறந்த பன்மொழி அறிஞராவார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

top videos

    தொடர்ந்து, இந்திய பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் நரேந்திர மோடி இன்று கலந்துகொள்கிறார். மேலும், நியூசிலாந்து பிரதமரையும் சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    First published:

    Tags: Modi