சிரோமணி அகாலி தளம் கட்சியின் முதுபெரும் தலைவரான பிரகாஷ் சிங் பாதலுக்கு, கடந்த வாரம் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரகாஷ் சிங் பாதல் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்ததில், இரைப்பை அழற்சி மற்றும் ஆஸ்துமா காரணமாக மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
‘இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பிரகாஷ் சிங் பாதல் நேற்று உயிரிழந்தார். இதனை அவரது மகனும், அகாலி தளம் கட்சியின் தலைவருமான சுக்பிர் சிங் பாதல் உறுதி செய்தார். 5 முறை முதலமைச்சராக இருந்த பிரகாஷ் சிங் பாதல், மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
இவரின் மறைவை ஒட்டி, தேசிய அளவில் இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அத்துடன், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாதல் மரணம் தொடர்பாக, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரகாஷ் சிங் பாதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், அவரது மகனும் சிரோமணி அகாலி தளத்தின் தலைவருமான சுக்பீர் சிங் பாதல் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பிரகாஷ் சிங் பாதலின் உடல் நாளை மதியம் 1 மணி வரை சண்டிகரில் வைக்கப்பட்டிருக்கும் என்றும், அதன் பிறகு அவரது சொந்த ஊரான முக்த்சார் மாவட்டத்தில் உள்ள பாதல் கிராமத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Modi