முகப்பு /செய்தி /இந்தியா / மீண்டும் அதிகரிக்கும் கொரோனா... பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா... பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை...

மாதிரி படம்

மாதிரி படம்

Prime Minister Modi Meeting | டெல்லியில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி மாலை 4.30 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார்.

  • Last Updated :
  • Delhi, India

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், டெல்லியில் இன்று மாலை பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்கிறார்.

நாட்டில் கொரோனா பரவல் வேகம் மீண்டும் அதிகரித்துள்ளது. 24 மணிநேரத்தில் இந்தியா முழுவதும் ஆயிரத்து 134 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 26 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 24 மணிநேரத்தில் 5 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். குறிப்பாக டெல்லி, சத்தீஸ்கர், குஜராத், மகாராஷ்ட்ரா மற்றும் கேரளாவில் கொரோனா உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன. தினசரி கொரோனா பரவலின் வீதமும் 1 .9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி மாலை 4.30 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா மேலும் பரவாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

First published:

Tags: Corona, India, PM Modi