முகப்பு /செய்தி /இந்தியா / நியூஸ்18 குழுமம் எடுத்த முயற்சியைப் பாராட்டுகிறேன்... மான் கீ பாத் குறித்த புத்தகத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து

நியூஸ்18 குழுமம் எடுத்த முயற்சியைப் பாராட்டுகிறேன்... மான் கீ பாத் குறித்த புத்தகத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஜக்தீப் தன்கர்

ஜக்தீப் தன்கர்

Rising India Summit 2023 | மான் கீ பாத் நிகழ்ச்சி குறித்த புத்தகத்தை வெளியிட்டதற்காக நியூஸ்18 குழுமத்திற்கு பிரதமர் மோடி பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Delhi, India

நெட்வொர்க் 18 நடத்தும் ரைசிங் இந்தியா நிகழ்வு டெல்லியில் மார்ச் 29, மார்ச் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்வேறு துறை சார்ந்த முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டு உலகளவில் இந்தியா ஏற்படுத்தியுள்ள மாற்றத்தைப் பற்றிக் கலந்துரையாடவுள்ளனர். மேலும் இந்தியாவில் கடைக்கோடியில் இருந்து சமுதாய முன்னேற்றத்திற்காக உழைத்த மக்களைக் கொண்டாடும் விதமாக 20 ரியல் ஹீரோக்களை கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

இந்த மாநாட்டின் தொடக்கவிழாவில் இந்திய துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தங்கர் சிறப்புரையாற்றினார். அதனைத்தொடர்ந்து, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜி20 மாநாட்டில் இந்தியாவின் நிலையைப் பற்றிப் பேசினார். மேலும் இதில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ஸ்மிருதி இரானி, அனுராக் தாக்கூர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இரண்டாம் நாள் நிகழ்வின்போது, நியூஸ்18 குழுமம் சார்பில் உருவாக்கப்பட்ட ‘இந்தியாவின் குரல் - மோடி மற்றும் அவரது உருமாறும் மனதின் குரல்’ என்ற புத்தகத்தை துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் வெளியிட்டார். அந்தப் புத்தகம், ‘பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால மன் கீ பாத் ரேடியோ நிகழ்ச்சியின் தொகுப்பு ஆகும். மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசிய பல்வேறு விஷயங்களைத் தொகுத்து உருவாக்கப்பட்ட புத்தகமாகும்.

இந்தநிலையில், இந்த புத்தக வெளியீட்டுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், ‘அடிமட்ட அளவில் மாற்றத்தைக் கொண்டுவருபவர்களைக் கொண்டாடியதுதான் மான் கீ பாத் நிகழ்வின் சிறப்பான பகுதி. இந்த நிகழ்ச்சி 100 பகுதிகளைக் கடந்துள்ள நிலையில், நான் குறிப்பிட்ட மக்களையும் அவர்கள் ஏற்படுத்திய தாக்கத்தையும் அங்கீகரிக்க சிஎன்என் நியூஸ்18 குழுமம் எடுத்த முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Modi, News18, NEWS18 RISING INDIA