முகப்பு /செய்தி /இந்தியா / பப்புவா நியூ கினி பயணம் : டோக் பிசின் மொழியில் திருக்குறளை வெளியிட்டார் பிரதமர் மோடி

பப்புவா நியூ கினி பயணம் : டோக் பிசின் மொழியில் திருக்குறளை வெளியிட்டார் பிரதமர் மோடி

டோக் பிசின் மொழியில் திருக்குறளை வெளியிட்ட மோடி

டோக் பிசின் மொழியில் திருக்குறளை வெளியிட்ட மோடி

நரேந்திர மோடிக்கு ஆர்டர் ஆஃப் லோகோஹூ கிராண்ட் கம்பேனியன் விருது வழங்கப்பட்டது

  • Last Updated :
  • Tamil Nadu, India

பப்புவா நியூ கினி நாட்டுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடி, அந்நாட்டில் பேசப்படும் டோக் பிசின் மொழியில், மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார்.

அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ஜி-7 உச்சி மாநாடு, குவாட் அமைப்பின் மாநாட்டை முடித்துக் கொண்டு, பப்புவா நியு கினி சென்றடைந்தார். அங்கு அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தின் ஆளுநர் சசீந்திரன் மற்றும் அவரின் மனைவி சுபா சசீந்திரன் ஆகியோர் டோக் பிசின் மொழியில் மொழிபெயர்த்த திருக்குறள் புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, திருக்குறள் என்பது உலகின் தலைசிறந்த படைப்பு என்று புகழ்ந்தார்.

முன்னதாக, பப்புவா நியூ கினி பிரதமர் ஜேம்ஸ் மராப்பே மற்றும் பிரதமர் மோடியின் அரசு ரீதியிலான சந்திப்பு நடைபெற்றது. அப்போது, வர்த்தகம், தொழில்நுட்பம், சுகாதாரம், காலநிலை மாற்றம் ஆகியவற்றில் இருநாடுகளின் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர் நடந்த 3ஆவது இந்திய பசிபிக் தீவுநாடுகள் கூட்டமைப்பின் மாநாட்டில், கூக் தீவுகள், பிஜி, கிரிபாடி, மார்ஷல் தீவுகள் குடியரசு, மைக்ரோனேசியா, நவுரு, நியு, பலாவ், பப்புவா நியூ கினி, சமோவா, சாலமன் தீவுகள், டோங்கா, துவாலு, வனுவாட்டு ஆகிய 14 பசிபிக் தீவு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, காலநிலை மாற்றம், வறுமை, பசி, இயற்கை பேரிடர்கள் என உலகம் முழுவதும் சவால்கள் நிறைந்திருப்பதாகவும், எரிபொருள், உணவு, உரம், மருந்து உள்ளிட்ட துறைகளில் பரவலான விநியோகம் இந்தியாவுக்கு இருப்பதாகவும் கூறினார்.அவரை தொடர்ந்து மாநாட்டில் உரையாற்றிய பப்புவா நியூ கினி பிரதமர் ஜேம்ஸ் மராப்பே, பிரதமர் மோடியை, பசிபிக் தீவு நாடுகளின் தலைவராக கருதுவதாகவும், சர்வதேச அரங்கில் இந்தியாவின் தலைமைக்கு பின்னால் அணி திரள்வதாகவும் கூறினார்.

Image

பின்னர், சாலமன் தீவுகள், ஃபிஜி, கூக் தீவுகள், கிரிபாடி, மார்ஷல் தீவுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும், பிரதமர் மோடியை சந்தித்தனர். அப்போது, உலகளாவிய தலைமைத்துவத்திற்காக பிரதமர் மோடிக்கு "தி கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஃபிஜி என்ற விருதை பிஜி பிரதமர் சிதிவேனி ரபுகா வழங்கினார். பிஜி குடிமக்கள் இல்லாத ஒருவருக்கு அளிக்கப்பட்ட அரிய கவுரவமாக கருதப்படுகிறது. இதே போல், பிரதமர் மோடிக்கு பப்புவா நியூ கினி விருது வழங்கியது. அந்நாட்டைச் சார்ந்திராத மிகச் சிலரே இந்த விருதைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Narendra Modi, PM Modi