முகப்பு /செய்தி /இந்தியா / அதிகரிக்கும் கொரோனா பரவல் : அதிகாரிகளை அலெர்ட் செய்த பிரதமர் மோடி!

அதிகரிக்கும் கொரோனா பரவல் : அதிகாரிகளை அலெர்ட் செய்த பிரதமர் மோடி!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

மருத்துவமனைகளில் போதிய அளவில் மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்

  • Last Updated :
  • Tamil Nadu, India

நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மரபணு திரிபு பரிசோதனைகளை அதிகரிக்க பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் கடந்த 2 வாரங்களாக மீண்டும் கொரோனா பரவல் சற்று வேகமெடுத்துள்ளது. ஒரே நாளில் சுமார் ஆயிரத்து 300-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா மற்றும் இன்புளூயன்சா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டார். அதில், புதிய வகை கொரோனாக்களை விரைந்து கண்டறிய வேண்டியது அவசியம் என்று மோடி அறிவுறுத்தியுள்ளார்.

மருத்துவமனைகளில் அனைத்து தரப்பினரும் முகக்கவசம் அணிவது அவசியம் என்று கூறிய பிரதமர், கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில், முதியவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

top videos

    நாடு முழுவதும் கொரோனா பரவலை வழக்கமான அடிப்படையில் கண்காணிப்பது அவசியம் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனைகளில் போதிய அளவில் மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், போதிய அளவில் படுக்கைகள மற்றும் மருத்துவப் பணியாளர்கள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய மோடி, சிகிச்சைக்கான ஒத்திகைகளை அடிக்கடி மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளார்.

    First published: