2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் இன்று வழங்கினார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்று வரும் இந்த விழாவில் 6 பத்ம விபூஷண், 9 பத்ம பூஷன், 91 பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்படுகிறது.
பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் நாட்டின் மக்களுக்கான உயரிய விருதுகளாகும். 1954 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மார்ச் / ஏப்ரல் மாதத்தையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் சம்பிரதாய விழாவில், குடியரசுத் தலைவர் இந்த விருதுகளை வழங்குவார். கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டுக்கள், மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், மக்கள் சேவை, வர்த்தகம், தொழில்துறை போன்றவற்றில் சிறந்த சாதனைகள் படைத்தவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
LIVE: President Droupadi Murmu presents Padma Awards 2023 at Civil Investiture Ceremony-I at Rashtrapati Bhavan https://t.co/jtEQQtx1DP
— President of India (@rashtrapatibhvn) March 22, 2023
கடந்த குடியரசுத் தினத்தன்று,நடடப்பாண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. 6 பத்ம விபூஷண், 9 பத்ம பூஷன், 91 பத்ம ஸ்ரீ என மொத்தம் 106 விருதுகள் வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.
பத்ம விபூஷன் விருது பட்டியல் பின்வருமாறு:-
பெயர் | துறை | மாநிலம் / நாடு |
பாலகிருஷ்ணா தோஷி(மறைவுக்குப்பிறகு) | மற்றவை- கட்டடக்கலை | குஜராத் |
சாகிர் உசேன் | கலை | மகாராஷ்ட்ரா |
எஸ்எம் கிருஷ்ணா | பொது விவகாரங்கள் | கர்நாடகா |
மகலனோபிஸ் (மறைவுக்குப் பிறகு) | மருத்துவம் | மேற்கு வங்காளம் |
ஸ்ரீனிவாஸ் வரதன் | அறிவியில் மற்றும் பொறியியல் | அமெரிக்கா |
முலாயம் சிங் யாதவ் (மறைவுக்குப் பிறகு ) | பொது விவகாரங்கள் | உத்தர பிரதேசம் |
இந்த விருது பட்டியலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர் இடம் பெற்றுள்ளனர். சமீபத்தில் மறைந்த, மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அதேபோன்று, பரதநாட்டியக் கலைஞர் கே.கல்யாணசுந்தரம் பிள்ளைக்கும், பாம்புகளை பிடிப்பதில் வல்லுனர்களாக வடிவேல் கோபால் மற்றும் மாசி ஆகியோருக்கும் , சமூக சேவகருமான பாலம் கல்யாணசுந்தரத்துக்கும், மருத்துவர் கோபால்சாமி வேலுச்சாமிக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Padma Awards