முகப்பு /செய்தி /இந்தியா / 16 வயது கர்ப்பிணி சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற காதலன்.. பெற்றோரை சிறைபிடித்து அடித்த பகீர் சம்பவம்

16 வயது கர்ப்பிணி சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற காதலன்.. பெற்றோரை சிறைபிடித்து அடித்த பகீர் சம்பவம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கர்ப்பிணி சிறுமியை அவரது காதலனே தீ வைத்து எரித்து கொலை செய்த பகீர் சம்பவம் பீகாரில் அரங்கேறியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Bihar, India

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் ரஜாவ்லி என்ற பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சோனு குமார். இவருக்கும் அங்குள்ள 16 சிறுமி ஒருவருக்கும் ஓராண்டுக்கு முன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. இருவரும் நெருக்கமாக பழகவே, சோனு குமார் மூலம் அந்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.

தனது கர்ப்பம் குறித்து சிறுமி, சோனு குமாரிடம் தெரிவித்து திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இந்த தகவலை கேட்ட பின்னர் சோனு குமார் சிறுமியிடம் பேசுவதை தவிர்க்கத் தொடங்கினார். ஆனால், சிறுமி, சோனு குமாரை விடாமல் துரத்திய நிலையில் கடந்த மார்ச் 13ஆம் தேதி அன்று சிறுமிக்கும் சோனு குமாருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் முற்றிப்போகவே, சோனு குமாரும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து அந்த சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்தை சிறுமியின் பெற்றோரின் முன்னிலையில் அரங்கேற்றியுள்ளனர். கர்ப்பிணி சிறுமி சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அத்தோடு நிற்காமல் சோனு குமாரின் குடும்பத்தினர் சிறுமியின் குடும்பத்தினரை சிறைபிடித்து அடைத்து வைத்தனர். யாருக்கும் தெரியாமல் சிறுமியின் உடலை அடக்கமும் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்... கத்தியால் குத்திக்கொன்ற திருநங்கை... தெலங்கானாவில் பகீர் சம்பவம்..!

தொடர்ந்து 4 நாள் கழித்து சிறுமியின் தந்தை அவர்களிடம் தப்பி வந்து காவல்துறையிடம் விவரத்தை கூறி புகார் தெரிவித்தார். அதன் பேரில் சோனு குமார் உள்ளிட்ட 4 பேர் மீது FIR பதிவு செய்த காவல்துறை தலைமறைவாக உள்ள சோனு குமார் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

First published:

Tags: Bihar, Crime News, Minor girl