தேசியவாத காங்கிரஸின் தலைவராகும் ஆசை தனக்கு இல்லை என்று அக்கட்சியின் துணை தலைவர் பிரஃபுல் படேல் தெரிவித்தார்.
மும்பையில் நேற்று தனது அரசியல் சுயசரிதை புத்தகத்தின் இரண்டாவது பதிப்பை வெளியிடும் நிகழ்ச்சியில் பேசிய சரத் பவார், “மே 1, 1960ம் ஆண்டு முதல் மே 1, 2023ம் ஆண்டு வரை பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளேன். தற்போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்,'' என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது தொண்டர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தனது முடிவை பரிசீலிப்பதாக சரத் பவார் அறிவித்தார்.
இந்நிலையில், கட்சியை தலைமைப் பொறுப்பில் இருந்து வழிநடத்துவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கட்சி தலைவராக யாரை தேர்வு செய்வது என்று ஆலோசனை கூட்டம் நடந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க; நடிகர் சரத்பாபு உடல்நலம்... வதந்திகளை நம்பாதீர்... குடும்பத்தினர் விளக்கம்..!
அக்கட்சியின் தலைவராக அஜித் பவார், சுப்ரியா, பிரஃபுல் படேல் ஆகிய 3 பேரில் ஒருவர் தேர்வாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் துணை தலைவர் பிரஃபுல் படேலிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, சரத் பவார் இன்னும் பதவியில் இருந்து விலகவில்லை, எனவே இது போன்ற கேள்விகளை தவிர்க்கவும் என்று கூறினார். மேலும் தனக்கு தலைவராகும் ஆசையில்லை என்றும் பிரஃபுல் படேல் கூறினார். தான் தற்போது வகிக்கும் பதவியே தனக்கு பெருமை அளிப்பதாக கூறிய அவர், கூடுதல் பொறுப்புகளை ஏற்கும் நிலையில்லை தான் இல்லை என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sharad Pawar