முகப்பு /செய்தி /இந்தியா / மாம்பழம் திருடிய போலீஸ்...பதவியில் இருந்து அதிரடியாக நீக்கம்..

மாம்பழம் திருடிய போலீஸ்...பதவியில் இருந்து அதிரடியாக நீக்கம்..

மாம்பலம் திருடிய போலீஸ்

மாம்பலம் திருடிய போலீஸ்

கேரளாவில் மாம்பழத்தை திருடிய போலீஸ் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

  • Last Updated :
  • Kerala, India

கேரளாவின் இடுக்கி பகுதியில் பணியாற்றி வரும் போலீஸ் ஒருவர் மாம்பழம் திருடிய வழக்கில் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கேரளா மாநிலம் இடுக்கியில் ஏஆர் முகாம் காவல் அதிகாரியாக பணியாற்றி வரும் ஷிஹாப், செப்டம்பர் 30-ம் தேதி காலை 4 மணியளவில் காஞ்சிரப் பள்ளியில் இருக்கும் கடை முன் வைத்திருந்த ரூ.600 மதிப்பு உள்ள 10 கிலோ மாம்பலத்தைத் திருடியுள்ளார்.

கடைக்காரர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், சிசிடிவி காட்சி மூலம் உண்மை வெளிவந்தது. பின்னர் 20 நாட்கள் தேடலின் பின்னர் ஷிஹாபை போலீசார் கைதுசெய்தனர். அதனைத்தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டநிலையில், கடைக்காரர் புகாரை வாபஸ் வாங்கியதன் மூலம் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

Also Read : 7.6 மில்லியன் ஃபாலோயர்ஸ் கொண்ட ANI செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கம் நீக்கம்- காரணம் தெரியுமா?

இந்த நிலையில், ஷிஹாபை போலீஸ் பணியில் இருந்து பணிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும் ஷிஹாப் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் ஆகிய இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

First published:

Tags: Kerala, Police