ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் உள்ள துக்கிரால நகரை சேர்ந்த மாணவி ஒருவர் அரசு பொறியியல் கல்லூரியில் பிடெக் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.அந்த மாணவியும் அதே பகுதியை சேர்ந்த அனுதீப் என்ற வாலிபரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.
இரண்டு பேரும் கடந்த ஒரு ஆண்டாக தீவிர காதலில் இருந்து வந்த நிலையில் பல்வேறு இடங்களுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வருவதை வாடிக்கையாக வைத்திருந்தனர். கடந்த 15 நாட்களுக்கு முன் மாணவியை கல்லூரியில் இருந்து அழைத்து வந்த அனுதீப் ஒரு அறையில் அடைத்து வைத்து ஆசைக்கு இணங்க வற்புறுத்தி உள்ளார். போதைக்கு அடிமையான அனுதீப் தினமும் போதை ஊசி போட்டுக் கொள்ளும் பழக்கம் உள்ளவர் என்றும் கூறப்படுகிறது.
அன்று காலையிலும் போதையில் இருந்த அனுதீப் தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு மாணவியை வற்புறுத்தி இருக்கிறார். அவர் சம்மதிக்கவில்லை.எனவே கோபமடைந்த அணுதீப் கொதிக்கும் எண்ணெயை மாணவியின் கால்களில் ஊற்றி அவரை சித்திரவதை செய்தார்.
இதையும் படிங்க; தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கக் கூடாது... இந்திய பார் கவுன்சில் தீர்மானம்..!
ஒரு வழியாக அங்கிருந்து தப்பித்த மாணவி மதியம் பலத்த காயத்துடன் வீட்டுக்கு வந்து தன்னை அனுதீப் ஒரு அறையில் அடைத்து வைத்து கொதிக்கும் எண்ணெயை ஊற்றி சித்திரை செய்ததாக பெற்றோரிடம் கூறினார். இதற்கான காரணம் பற்றி பெற்றோர் விசாரித்த போது அனுதீப் தன்னை காதலித்ததாகவும், கல்லூரியில் இருந்து அழைத்து வந்து 15 நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தியதாக தெரிவித்தார்.
மறுத்த காரணத்தால் கொதிக்கும் எண்ணெயை கால்களில் ஊற்றி சித்திரவதை செய்ததாகவும் தெரிவித்தார். படுகாயம் அடைந்த
மாணவியை தற்போது ஏலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்றோர் சேர்த்துள்ளனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த சம்பவம் பற்றிய பெற்றோர் அளித்துள்ள புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மாணவியிடம் வாக்குமூலம் பெற்று தலைமறைவாகி இருக்கும் அனுதீப்பை தீவிரமாக தேடி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Torture