முகப்பு /செய்தி /இந்தியா / புதிய நாடாளுமன்றத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் - பிரதமர் மோடி வெளியிட்டார்

புதிய நாடாளுமன்றத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் - பிரதமர் மோடி வெளியிட்டார்

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

புதிய நாடாளுமன்ற கட்டடம் அனைத்து இந்தியர்களையும் பெருமைப்படுத்தும் என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

  • Last Updated :
  • Delhi, India

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் முதல் காட்சியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி வரும் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கிறார். 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் முக்கோண வடிவில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட நாடாளுமன்றத்தின் முதல் காட்சி வெளியாகி உள்ளது.

இதில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் 1,272 பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் உச்சியில் அசோகர் சின்னம் பொருத்தப்பட்டுள்ளது. சுமார் 970 கோடி ரூபாய் செலவில் நாடாளுமன்ற கட்டடம் அமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இந்த வீடியோவை டிவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "புதிய நாடாளுமன்ற கட்டடம் அனைத்து இந்தியர்களையும் பெருமைப்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார். அனைவரும் தங்கள் எண்ணத்தை குரல் மூலம் இந்த வீடியோவுடன் பகிருமாறும் பிரதமர் வேண்டுக்கோள் விடுத்துள்ளார். MyParliamentMyPride என்ற ஹேஷ்டேக்குடன் வீடியோவை பகிறுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

top videos
    First published:

    Tags: Central Vista, PM Narendra Modi