பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையின் போது, பாஜக மாநில தலைவர்களைவிடவும் தன்னை பற்றி தான் அதிகம் பேசுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார்.
சிக்மங்களூருவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, மாநிலத்தின் பிரச்னைகளைப் பற்றி பேசாமல், தன்னைப் பற்றி மட்டுமே பிரதமர் பேசுவதாக கூறினார். பரப்புரையின் போது, 70 சதவீதம் தன்னைப் பற்றியும், 30 சதவீதம் மாநிலத்தைப் பற்றியும் பிரதமர் பேசுவதாக விமர்சித்தார். மாநில தலைவர்களைப் பற்றி குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சி வாக்குச் சேகரிக்கும் போது, முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் எடியூரப்பா பெயர்களைக் கூட பிரதமர் உச்சரிக்கவில்லை என ராகுல் காந்தி கூறினார்.
மேலும், கர்நாடகாவின் சிந்தாமணி நகரில் வாக்கு சேகரித்த போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தனது வாகனத்தில் இருந்து கீழே இறங்கினார். தூய்மைப் பணியாளரான ராணி என்பவரை பரப்புரை வாகனத்தின் மீது அழைத்துச் சென்று பிரியங்கா வாக்குசேகரித்தார்.
இதையும் படிக்க : ராகுலுக்கு சிறை தண்டனை... தடை விதிக்க மறுத்த குஜராத் உயர்நீதிமன்றம்..!
பழைய விஷயங்களையும், மோதலை தூண்டும் வகையிலும் பேசாமல்..., ஊழல், பணவீக்கம், வறுமை, வேலையின்மை போன்ற மக்கள் பிரச்னைகளை பேசி பிரதமர் உள்ளிட்ட பாஜகவினர் தேர்தலை சந்திக்க தயாரா என பிரியங்கா காந்தி சவால் விடுத்தார். பின்னர் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் பிரச்னைகளை பிரதமர் மோடி பேசுவதில்லை என சாடினார்.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் கர்நாடகாவில் எவ்வளவு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என அவர் கேள்வி எழுப்பினார். பின்னர் பெங்களூருவின் ஹோஸ்கோட், சி.வி.ராமன் நகர் உள்ளிட்ட பகுதியில் உற்சாகமாக கைகளைத்தட்டி வாக்குசேகரித்தார்.
இதனிடையே, கர்நாடக மாநில அதிமுக செயலாளர் குமார் மற்றும் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டு பிறகு வாபஸ் பெற்ற அன்பரசன் ஆகியோர் பெங்களூரில் கர்நாடக தேர்தல் பொறுப்பாளர் அண்ணாமலையை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். கர்நாடகா தேர்தல் மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்கவுள்ளதும், வாக்கு எண்ணிக்கை மே 13ஆம் தேதி நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Congress, Karnataka, Karnataka Election 2023, Rahul Gandhi