முகப்பு /செய்தி /இந்தியா / கோவை இயற்கை விவசாயி பாப்பம்மாள் காலில் விழுந்து ஆசிபெற்ற பிரதமர் மோடி..!

கோவை இயற்கை விவசாயி பாப்பம்மாள் காலில் விழுந்து ஆசிபெற்ற பிரதமர் மோடி..!

பத்ம ஸ்ரீ பாப்பம்மாள் பாட்டியின் காலில் விழுந்து ஆசி பெற்ற பிரதமர் மோடி

பத்ம ஸ்ரீ பாப்பம்மாள் பாட்டியின் காலில் விழுந்து ஆசி பெற்ற பிரதமர் மோடி

சிறுதானியங்களை உற்பத்தி செய்வதற்கான ஸ்ரீ அன்ன திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

டெல்லியில் உள்ள பூசாவில் சர்வதேச சிறுதானியங்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, சிறப்பு தபால் தலையையும், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ நாணயத்தையும் வெளியிட்டார். இவைதவிர, உணவு தட்டுப்பாடு அதிகம் உள்ள கயானா, எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்புடன் சிறுதானியங்களை உற்பத்தி செய்வதற்கான ஸ்ரீ அன்ன திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், மன்சுக் மாண்டவியா, பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கயானா அதிபர் இர்ஃபான் அலி, எத்தியோப்பியா அதிபர் சாஹ்லே-வொர்க் ஸுடே(Sahle-Work Zewde) உள்ளிட்டோர் காணொலி காட்சி வழியாக இதில் பங்கேற்றனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டை இந்தியா முன்னெடுத்துச் செல்வதில் பெருமைக்கொள்வதாக கூறினார். மேலும் உலக சிறுதானியங்கள் மாநாட்டில் பங்கேற்ற கோவை மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 107 வயது இயற்கை விவசாயி பத்மஸ்ரீ பாப்பம்மாளிடம், பிரதமர் நரேந்திரமோடி காலில் விழுந்து ஆசி பெற்றார்.

First published:

Tags: Millets Food, PM Narendra Modi