முகப்பு /செய்தி /இந்தியா / மன் கீ பாத்தில் பிரதமர் ஒருமுறை கூட அரசியல் பேசவில்லை... அமித்ஷா

மன் கீ பாத்தில் பிரதமர் ஒருமுறை கூட அரசியல் பேசவில்லை... அமித்ஷா

உள்துரை அமைச்சர் அமித் ஷா

உள்துரை அமைச்சர் அமித் ஷா

மனதின் குரல் நிகழ்ச்சியின் 100 ஆவது அத்தியாயம் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி ஒலிபரப்பாக உள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

2014 ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறுக்கிழமை, மனதின் குரல் என்ற பெயரில் பிரதமர் மோடி வானொலி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சியின் 100 ஆவது அத்தியாயம் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி ஒலிபரப்பாக உள்ளது. இதனை ஒட்டி டெல்லியில் மனதில் குரல் மாநாடு நடைபெற்றது.

இதில், மன் கி பாத் நிகழ்ச்சியின் 100 ஆவது அத்தியாயத்தை நினைவு படுத்தும் வகையில், 100 ரூபாய் நாணயத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார். அப்போது பேசிய அவர், ஜனநாயகத்திற்கு பிரதமர் மோடி 2 முக்கிய பங்களிப்பை செய்திருப்பதாக கூறினார். மேலும் ஜனநாயக அமைப்பை சாதி, வாரிசு மற்றும் அடிமைத்தன அரசியலில் இருந்து மோடி மீட்டெடுத்ததாக அமித்ஷா தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பத்ம விருதுகள் தகுதியானவர்களுக்கு கிடைக்க பிரதமர் மோடி வழிவகை செய்ததாக புகழாரம் சூட்டினார். மேலும் அரசியல்வாதியாக இருந்தும் பிரதமர் மோடி, மனதின் குரல் நிகழ்ச்சியின் 99 அத்தியாயங்களில் ஒரு முறை கூட அரசியல் குறித்து பேசவில்லை என்று அமித்ஷா தெரிவித்தார். முன்னதாக இந்நிகழ்ச்சியில் திரைத்துறையை சேர்ந்த அமீர்கான், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி குறித்து பேசினர்.

First published:

Tags: Amit Shah, Mann ki baat, PM Narendra Modi