முகப்பு /செய்தி /இந்தியா / அதிகார பசி கொண்டவர்களால் நாடு பெரும் இன்னல்களை சந்தித்தது: பிரதமர் மோடி

அதிகார பசி கொண்டவர்களால் நாடு பெரும் இன்னல்களை சந்தித்தது: பிரதமர் மோடி

அசாமில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி

அசாமில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி

PM Modi In Assam | கவுஹாத்தியில் பிஹூ திருவிழாவை ஒட்டி அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

  • Last Updated :
  • Assam, India

அதிகார பசி கொண்டவர்களால் நாடு பெரும் இன்னல்களை சந்தித்ததாக காங்கிரஸ் கட்சியை பிரதமர் நரேந்திர மோடி சாடியுள்ளார்.

அசாம் மாநிலம் கவுஹாத்தியில் பிஹூ திருவிழாவை ஒட்டி அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், கலந்து கொண்ட பிரதமர் மோடி, 14 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு திட்டங்களை தொடங்கி வைத்தார். குறிப்பாக ஆயிரத்து 123 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இதே போன்று நல்பாரி, கோக்ரஜார் மற்றும் நாகோன் மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கடந்த 9 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வளர்ச்சியை கண்டு பலர் மன வேதனை அடைவதாக காங்கிரஸை மறைமுகமாக சாடினார்.

இதையும் படிங்க: 4 ஆடு மேய்த்தால் ரூ.3.75 லட்சம் வாடகை கொடுத்து குடியிருக்க முடியுமா? அண்ணாமலையை விமர்சனம் செய்த செந்தில்பாலாஜி

பின்னர், கவுஹாத்தி உயர்நீதிமன்றத்தின் 75 ஆவது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட பல்வேறு சட்டங்கள் தற்போது தேவையற்று போனதாக கூறினார். அதன் அடிப்படையில், சுமார் இரண்டாயிரம் சட்டங்களை ரத்து செய்து, வழக்குகளின் எண்ணிக்கையை குறைத்திருப்பதாக மோடி கூறினார். பொதுக்கூட்டத்திற்கு பிறகு, திறந்த வாகனத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேரணி சென்றார். அப்போது பாஜகவினர் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

top videos
    First published:

    Tags: Assam, PM Modi