பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியது முதலே நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் முடங்கி வருகின்றன. இன்று நாடாளுமன்றம் தொடங்கியதும், அதானி குழுமம் மீதான புகாரை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வலியுறுத்தியும், ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காங்கிரஸ் மற்றும் அதன் தோழமை கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். மக்களவை தொடங்கியதும், சபாநாயகர் மீது காகிதங்களை தூக்கி வீசிய எதிர்க்கட்சியினரால், மக்களவை ஒரு நிமிடத்திற்குள்ளாகவே முடங்கியது.
இதே போன்று மாநிலங்களவை தொடங்கியதும் அமளி ஆரம்பமானது. அவை நடவடிக்கைகள் தொடர்ந்தபோது அதானி விவகாரம் மற்றும் ராகுல்காந்தி தகுதிநீக்கத்தை கண்டித்து எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டனர். இதனால் 10 நிமிடங்கள் மட்டுமே மாநிலங்களவை இயங்கியது. தொடர்ந்து நடத்த முடியாததால் மக்களவை மற்றும் மாநிலங்களவை நாளை காலை 11 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் 11 ஆவது நாளாக முடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சித் தலைவர் ஜெ.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும் அமைச்சர்கள், பாஜக எம்பிகள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும் அண்மையில் நடந்து முடிந்த நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா மாநில தேர்தல்களில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா மோடிக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் பேசிய பிரதமர் மோடி, "பாஜக எவ்வளவு வெற்றிகள் பெறுகிறதோ அவ்வளவு எதிர்ப்புகள் வரும் என்பதால் வலுவான யுத்தத்துக்கு தயாராக இருங்கள்" என்றார். மேலும் ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் நிறைவு செய்வதை ஒட்டி, பாஜக எம்பிகள் தங்கள் தொகுதிகளுக்கு சென்று மக்களிடம் பரப்புரை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். வரும் மே 15ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதிக்குள் இந்த பரப்புரையை மேற்கொள்ள பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Amit Shah, BJP, J.P.Nadda, PM Narendra Modi