முகப்பு /செய்தி /இந்தியா / பாதுகாப்பை மீறி பிரதமரை நோக்கி ஓடிய இளைஞர்.. மடக்கிப் பிடித்த காவலர்கள்.. கர்நாடகாவில் பரபரப்பு..!

பாதுகாப்பை மீறி பிரதமரை நோக்கி ஓடிய இளைஞர்.. மடக்கிப் பிடித்த காவலர்கள்.. கர்நாடகாவில் பரபரப்பு..!

மோடி ஊர்வலம்

மோடி ஊர்வலம்

பிரதமர் மோடி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நின்றபடி தொண்டர்களை நோக்கி கையைசைத்துக் கொண்டே வந்தார்.

  • Last Updated :
  • Karnataka |

கர்நாடகா மாநிலம் தாவநகரேயில் நேற்று நடைபெற்ற சாலை ஊர்வலத்தின்போது போலீஸ் பாதுகாப்பை மீறி, பிரதமர் மோடி சென்ற வாகனத்தை நோக்கி இளைஞர் ஒருவர் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடகாவில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், அம்மாநிலத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அதன் ஒரு பகுதியாக தாவநகரே பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்றார்.

பின்னர் தாவநகரேயில் இருந்து மலர்களால் அலங்கரிக்கபட்ட வாகனத்தில் நின்றபடி  தொண்டர்களை நோக்கி கையைசைத்துக் கொண்டே பேரணியாக மோடி சென்றுகொண்டு இருந்தார். அந்த வாகனத்தை சுற்றி பிரதமர் பாதுகாப்பு அதிகாரிகளும், மாநில காவல் துறையினரும் நடந்துகொண்டே வந்தனர்.

சாலையை விட்டு சிறிது தொலைவில், இருபுறமும் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென தடுப்புகளை தாண்டிக் குதித்து பிரதமர் மோடியின் வாகனத்தை நோக்கி ஓடினார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவலர் ஒருவர், விரைந்து சென்ற இளைஞரை மடக்கிப் பிடித்தார். உடனடியாக மற்ற காவலர்களும் இணைந்து அந்த நபரை அப்புறப்படுத்தினர்.

பாதுகாப்பை மீறி மோடியை ரசிகர்கள் நெருங்க முயலும் இரண்டாவது சம்பவம் இதுவாகும். அதற்கு முன்னர் கர்நாடகாவில் ஜனவரி 12ம் தேதி, பிரதமர் மோடி வருகையின்போது இதே போன்றதொரு சம்பவம் நடைபெற்றிருந்த நிலையில், தற்போது மீண்டும் பிரதமரின் பயணத்தின்போது பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Karnataka, Modi, Security guards