முகப்பு /செய்தி /இந்தியா / கர்நாடக மக்களுக்கு பிரதமர் மோடி உருக்கமான கடிதம்...

கர்நாடக மக்களுக்கு பிரதமர் மோடி உருக்கமான கடிதம்...

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

PM Modi Write Letter To Karnataka people | கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கர்நாடகா நம்பர் ஒன் ஆக இருக்க வேண்டும் என்று தாங்கள் விரும்புவதாக பிரதமர் கடிதம்

  • Last Updated :
  • Karnataka, India

நாட்டிலேயே முதல் மாநிலமாக்க ஆசீர்வாதத்தை எதிர்பார்பதாக கர்நாடக மக்களுக்கு பிரதமர் மோடி வெளிப்படையான கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முந்தைய நாளில் பிரதமர் மோடி அம்மாநில மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடிமக்களின் கனவும் தனது கனவு என்று தெரிவித்துள்ளார். உங்கள் குடும்பத்தின் எதிர்காலமே கர்நாடகாவின் பிரகாசமான எதிர்காலம் என்றும், இன்றைய தலைமுறையின் எதிர்காலத்திற்காக வேண்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் இந்தியாவை முதல் 3 இடங்களுக்குள் கொண்டு வரும் இலக்கை கொண்டிருப்பதாகவும், கர்நாடகாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்போது மட்டுமே இது சாத்தியமாகும் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஆவடி நாசரின் அமைச்சர் பதவி பறிப்பு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை..!

 கர்நாடக மக்கள் எப்போதும் தன் மீது அன்பை பொழிந்து வருவதாகவும், கர்நாடகாவை நாட்டிலேயே முதன்மை மாநிலமாக மாற்றும் பணிக்காக உங்கள் ஆசீர்வாதங்களை எதிர்பார்ப்பதாக பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

top videos

    கொரோனா தொற்று காலத்தில் கூட கர்நாடகாவில் ஆண்டுக்கு 90 ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய முதலீடு கிடைத்திருப்பது இளைஞர்களுக்கான பாஜகவின் அர்ப்பணிப்பு என சுட்டிக்காட்டியுள்ளார்.முதலீடு தொழில்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கர்நாடகா நம்பர் ஒன் ஆக இருக்க வேண்டும் என்று தாங்கள் விரும்புவதாகவும் பிரதமர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Karnataka Election 2023, PM Modi