முகப்பு /செய்தி /இந்தியா / ஈஸ்டர் திருநாள்: டெல்லி தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றிய பிரதமர் மோடி

ஈஸ்டர் திருநாள்: டெல்லி தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றிய பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

தேவாலயத்தில் அமர்ந்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். தேவாலயத்தில் இருந்த இயேசு கிறிஸ்துவின் சிலையின் முன்பாக, பிரதமர் மோடி மெழுகுவர்த்தி ஏற்றினார்

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஈஸ்டர் தினத்தன்று, டெல்லியில் உள்ள தேவாலயத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரார்த்தனை மேற்கொண்டார்.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கடந்த இரண்டு நாட்களாக கலந்து கொண்ட பிரதமர் மோடி, டெல்லி திரும்பிய நிலையில், அங்குள்ள புனித இருதய கதீட்ரல் கத்தோலிக்க (Sacred Heart Cathedral Catholic) தேவாலயத்திற்குச் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தேவாலயத்தில் அமர்ந்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். தேவாலயத்தில் இருந்த இயேசு கிறிஸ்துவின் சிலையின் முன்பாக, பிரதமர் மோடி மெழுகுவர்த்தி ஏற்றினார்.

top videos

    இதையடுத்து, தேவாலயம் சார்பில் அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. தேவாலய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். பின்னர் அவருடன் தேவாலய அருட்தந்தை பலரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    First published:

    Tags: Easter, PM Modi