முகப்பு /செய்தி /இந்தியா / Exclusive : ஆஸ்கர் விருது நாயகர்கள் பொம்மன், பெள்ளி தம்பதியை சந்திக்க ஏப். 9 முதுமலை வருகிறார் பிரதமர் மோடி..

Exclusive : ஆஸ்கர் விருது நாயகர்கள் பொம்மன், பெள்ளி தம்பதியை சந்திக்க ஏப். 9 முதுமலை வருகிறார் பிரதமர் மோடி..

பிரதமர் மோடி முதுமலை வருகை

பிரதமர் மோடி முதுமலை வருகை

Exclusive : முதுமலை காப்பத்திற்கு ஏப்ரல் 9 ஆம் தேதி பிரதமர் மோடி வருகிறார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஏப்ரல் 9-ம் தேதியன்று நீலகிரி மாவட்டம் முதுமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி வரவுள்ளதாக நியூஸ் 18 Rising India நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் தகவல் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நியூஸ்18 தொலைக்காட்சி நடத்தும் ’ரைசிங் இந்தியா 2023’நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ், பிரதமர் நரேந்திர மோடியின் வருகை குறித்து தெரிவித்துள்ளார்.

50 ஆண்டு புலிகள் பாதுகாப்பு நிகழ்வைக் கொண்டாடும் வகையில் பந்திப்பூர், முதுமலை, வயநாடு சரணாலயங்களைப் பிரதமர் மோடி பார்வையிடுகிறார். அதில் ஆஸ்கர் விருது பெற்ற "The Elephant Whisperers” நாயகர்களான பொம்மன், பெள்ளி தம்பதிகளைச் சந்திக்கவுள்ளார்.

முன்னதாக "The Elephant Whisperers” திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் பிரதமர் மோடியைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, அறிவார்ந்த குழுவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாகக் கூறினார். இக்குழுவினர் இந்தியாவை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளனர் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

top videos

    மேலும் முதுமலை யானைகள் மீட்பு மையத்தைக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விரைவில் பார்வையிடவுள்ளார். "The Elephant Whisperers” குழுவினர் மற்றும் பொம்மன், பெள்ளி ஆகியோரை சந்திக்க உள்ளார்.

    First published:

    Tags: NEWS18 RISING INDIA, Oscar Awards, PM Modi