முகப்பு /செய்தி /இந்தியா / 100 கோடி பேர் கேட்ட மன் கி பாத்.. இந்தி நேயர்கள் அதிகம்.. ஆய்வில் சொல்லப்பட்ட பல தகவல்!

100 கோடி பேர் கேட்ட மன் கி பாத்.. இந்தி நேயர்கள் அதிகம்.. ஆய்வில் சொல்லப்பட்ட பல தகவல்!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

வரும் 30 ஆம் தேதியன்று மன் கி பாத் 100 ஆவது நிகழ்ச்சியை நிறைவு செய்யவுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சியை 100 கோடிக்கும் அதிகமானோர் கேட்டுள்ளதாகவும், நாட்டில் 96 சதவீதம் பேர் மன் கி பாத் நிகழ்ச்சி குறித்து தெரிந்துள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் என பொருள்படும் மன் கி பாத் நிகழ்ச்சியை ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தி வருகிறார். வரும் 30 ஆம் தேதியன்று மன் கி பாத் 100 ஆவது நிகழ்ச்சியை நிறைவு செய்யவுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு பின்வரும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

  • மன் கி பாத் நிகழ்ச்சி குறித்து நாட்டில் 96 சதவீதம் பேர் அறிந்து வைத்துள்ளனர்.
  • 100 கோடிக்கும் அதிகமானோர் இந்த நிகழ்ச்சியை கேட்டுள்ளனர். 23 கோடிப்பேர் வழக்கமாக மன் கி பாத் நிகழ்ச்சியை கேட்கின்றனர். இந்த எண்ணிக்கை 41 கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
  • மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரதமர் மோடியின் இமேஜ் உயர்ந்துள்ளது. அவரது அறிவாற்றலை, உணர்வுப் பூர்வமான மக்கள் தொடர்பை, வலிமையான தலைமையை, எளிமையான அணுகுமுறையை, நேரடியாக குடிமக்களுடன் உரையாடும் பண்பை பார்வையாளர்கள் விரும்புகின்றனர்.
  • மன் கி பாத் நிகழ்ச்சி பார்வையாளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் 60 சதவீதம்பேர் நாட்டுக்காக உழைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். 59 சதவீதம் பேர் அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவாக உள்ளனர். 58 சதவீதம் பேர் தங்களது வாழ்க்கை தரம் உயர்ந்திருப்பதாக கூறுகின்றனர்.
  • மன் கி பாத் நிகழ்ச்சியை ரேடியாவில் 17.6 சதவீதம் பேரும், போனில் 37.6 சதவீதம் பேரும், டிவியில் 44.7 சதவீதம் பேரும் பார்க்கிறார்கள்.
  • மன் கி பாத்திற்கு இந்தி பார்வையாளர்கள் அதிகம் உள்ளனர். மொத்த பார்வையாளர்களில் 65 சதவீதம் பேர் இந்தி மொழி பேசுபவர்கள். இற்கு அடுத்ததாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட மன் கி பாத்தை பார்ப்போர் சதவீதம் 18 ஆக உள்ளது. மொத்த பார்வையாளர்களில் 2 சதவீதம் பேர் தமிழ் மொழிக்கு உள்ளனர்.
  • இந்தியாவின் அறிவியல் சாதனைகள், சாமான்ய மக்களின் கதைகள், முப்படைகளின் வீர தீர செயல்கள், இளைஞர் பிரச்னைகள், சுற்றுச் சூழல் மற்றும் தேசிய வளங்கள் தொடர்பான மன் கி பாத் நிகழ்ச்சிகள் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.
top videos

    First published:

    Tags: Mann ki baat, PM Modi