முகப்பு /செய்தி /இந்தியா / கடைகோடி தமிழர்களை நாடு முழுவதும் அறியச் செய்த பிரதமர் மோடி… மன் கி பாத் நிகழ்ச்சியின் நினைவலைகள்…

கடைகோடி தமிழர்களை நாடு முழுவதும் அறியச் செய்த பிரதமர் மோடி… மன் கி பாத் நிகழ்ச்சியின் நினைவலைகள்…

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

உலகின் பழமையான மொழியான தமிழ் மொழி இந்திய நாட்டிற்குள் இருப்பதை எண்ணி ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ள வேண்டும்

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டின் பல்வேறு சிறப்புகளை, தமிழர்களின் தனித்துவத்தை பிரதமர் மோடி தனது மன் கி பாத் ரேடியோ நிகழ்ச்சியில் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தின் பெருமைமிகு சிறப்புகளை பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி நாடு முழுவதும் கொண்டு சேர்த்துள்ளது.

மனதின் குரல் என்று பொருள்படும் மன் கி பாத் என்ற ரேடியோ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். ஒவ்வொரு மாதமும் கடைசி வார ஞாயிற்று கிழமைகளில் இந்த நிகழ்ச்சி ரேடியோக்களில் ஒலிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ஏப்ரல் 30 ஆம் தேதி  அடுத்த வாரம் ஞாயிற்று கிழமையன்று மனதின் குரல் நிகழ்ச்சி 100 ஆவது பதிப்பை நிறைவு செய்கிறது.

பிரதமர் மோடி தனது மன் கி பாத் நிகழ்ச்சியில் பல்வேறு தருணங்களில் தமிழ்நாட்டின், தமிழர்களின் சிறப்பை பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக தமிழ் இலக்கியம், மொழி வளமை பற்றி பாராட்டி பேசியுள்ளார் பிரதமர் மோடி. தமிழ் கலாசாரம் நீண்ட நெடிய ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருவதை வியந்தும் பாராட்டியும் மோடி பேசியிருக்கிறார். உலகின் பழமையான மொழியான தமிழ் மொழி இந்திய நாட்டிற்குள் இருப்பதை எண்ணி ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ள வேண்டும் என்று ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார். மன் கி பாத் நிகழ்ச்சியின் பல்வேறு தருணங்களில் இதுபோன்று பிரதமர் மோடி தமிழின் சிறப்பை பெருமைப்படுத்தியுள்ளார்.

top videos

    நாகையில் நதியை காக்க 20 ஆயிரம் பெண்கள் ஒன்றிணைந்தது, தூத்துக்குடியில் புயல் பாதிப்பிலிருந்து பாதுகாக்க பனை மரங்களை நடுவது உள்ளிட்டவற்றை மோடி தனது மன் கி பாத் நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார். பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்புகளை சரி செய்வதற்காக திருப்பூர் மாவட்டதை சேர்ந்த தாயம்மாள் என்பவர் நன்கொடை அளித்தை பிரதமர் குறிப்பிட்டிருந்தார். இது தேசிய அளவில் கவனம் பெற்றது. உலக நாடுகள் அனைத்தும் பின்பற்ற தக்க நூல் என்று திருக்குறளை பாராட்டி பேசியுள்ளார். இதேபோன்று மன் கி பாத்தின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தமிழ் கலாசாரம், மொழி வளமை, மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் திறன் உள்ளிட்டவறை சிலாகித்து பேசியுள்ளார் பிரதமர் மோடி.

    First published:

    Tags: Mann ki baat, PM Modi