பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் மக்களிடம் பேசுவது வழக்கம், அப்படி இதுவரை 99 முறை பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் உரையாற்றியுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக 100வது நாள் நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி பேசினார். நிகழ்வில் பேசிய அவர், ''இந்த நிகழ்ச்சி குறித்து பல கடிதங்கள் வந்துள்ளன; இதன்மூலம் பல்வேறு உணர்வுகளை புரிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு சாதனையாளர்களை தொடர்பு கொண்டு பேசுவதுடன், அவர்களை பாராட்டும் வாய்ப்பும் கிடைத்தது. மக்களுடனான தொடர்புக்கு ஒரு முக்கிய கருவியாக இருந்தது; கோடிக்ககணக்கான இந்தியர்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக இருந்தது என்றார்.
இதையும் படிக்க | மனதின் குரல் 100: சிறப்பான தருணங்களின் போட்டோ ஷேர் பண்ணுங்க - மோடி ட்வீட்
இந்த நிலையில் ஹரியானாவில் பெண் சிசுக் கொலைகளை தடுக்க, செல்ஃபி வித் டாட்டர் (Selfie With Daughter) என்ற திட்டத்தை துவங்கிய சுனில் ஜக்லன் (Sunil Jaglan) பிரதமர் மோடியின் மன் கி பாத் 100வது நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நிகழ்வில் தனது திட்டத்தைப் பிரபலப்படுத்திய பிரதமர் மோடிக்கு ஜக்லன் நன்றி தெரிவித்தார்.
சுனில் ஜக்லன் இந்தத் திட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை சமூக வலைதளங்களில் பகிருமாறு கேட்டுக்கொண்டார். கடந்த 8 வருடத்தில் 80 நாடுகளை சேர்ந்த சினிமா, விளையாட்டுத்துறையை சேர்ந்த பிரபலங்கள் தங்களது மகள்களுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை பகிர்ந்ததாக அவர் பெருமிதம் தெரிவித்தார். இந்தத் திட்டம் ஹரியானா மாநிலத்தில் பெண் குழந்தைகள் குறித்த தவறான எண்ணம் மாற உதவும் என நம்பியதாக குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mann ki baat, Narendra Modi