கர்நாடகா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் ஹரிஹரா தொகுதி எம்.எல்.ஏவான ராமப்பாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்க வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் பெங்களூருவில் உள்ள சித்தராமையாவின் வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது அங்கு சென்ற சித்தராமையா, தொண்டர் ஒருவரின் கன்னத்தில் அறைந்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது.
இதையும் படிக்க : தொண்டரின் கன்னத்தில் அறைந்த சித்தராமையா... வீடியோ வைரலாகி பரபரப்பு..!
இந்த நிலையில், கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற விஜய சங்கல்ப யாத்திரை நிறைவு விழாவில் பேசிய பிரதமர் மோடி, சமூக ஊடகத்தில் வெளியான வீடியோ ஒன்றை பற்றி தனக்கு தெரிய வந்தது என்றும் அதில், ஒரு பெரிய தலைவரான சித்தராமையா சொந்த கட்சி தொண்டரை அறையும் காட்சி இடம் பெற்று இருந்தது எனவும் கூறினார். சொந்த தொண்டர்களை மதிக்காதவர்கள் எப்படி மக்களை மதிப்பார்கள்? எனவும் பிரதமர் மோடி வினவினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Congress, PM Narendra Modi, Siddaramaiah