முகப்பு /செய்தி /இந்தியா / நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் : பாஜக ஆளும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் : பாஜக ஆளும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், பிரதமரின் 9 ஆண்டுகால ஆட்சியின் சிறப்பினை மக்களிடம் எடுத்துச் செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக, பாஜக ஆளும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழா டெல்லியில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில், டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில், பாஜக ஆளும் மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்களை பிரதமர் மோடி சந்தித்தார். பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, பிரதமர் மோடிக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், பிரதமரின் 9 ஆண்டுகால ஆட்சியின் சிறப்பினை மக்களிடம் எடுத்துச் செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், பாஜகவின் சாதனைகளை விளக்கும் வகையில், மே 30 முதல் ஜூன் 30 வரை நடைபெறும் “மகா-ஜன் சம்பர்க் அபியான்” என்ற பரப்புரையை பூத் மட்டத்தில் கொண்டு சேர்ப்பது தொடர்பாகவும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், மகராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

First published: