சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களின் நிலை குறித்து பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவப்படை இடையே ஏற்பட்ட அதிகார மோதல், உள்நாட்டு போராக உருவெடுத்தது. இரண்டு தரப்பினரும் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் இதுவரை சுமார் 300 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சூடானில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் தூதரகம் அறிவுறுத்தியது. இதனிடையே ரமலான் பண்டிகையை ஒட்டி, உள்நாட்டுப் போர் தற்காலிகமாக 72 மணி நேரத்திற்கு நிறுத்திவைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, சூடானில் உள்ள இந்தியர்களின் நிலை குறித்து காணொலி வாயிலாக பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத் துறை மற்றும் தூதரக உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சூடானில் உள்ள இந்திய தூதரகத்தின் புள்ளிவிவரப்படி, சுமார் 2,800 இந்தியர்கள் அந்நாட்டில் வசிக்கின்றனர். அவர்களின் பாதுகாப்பு மற்றும் போர் நிலவரம் குறித்து பிரதமர் மோடி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, அவர்களை பத்திரமாக மீட்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களைப் பத்திரமாக மீட்குமாறு பிரதமர் மோடிக்கு கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
Also Read : இந்தியாவில் குறைந்த கட்டணத்தில் இணையச் சேவை... பிரதமர் மோடி பெருமிதம்..!
அதில், கேரளாவைச் சேர்ந்தவர்கள் சூடானில் சிக்கி இருப்பதாக மாநில அரசுக்குத் தகவல் கிடைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: External Minister jaishankar, PM Modi, War