முகப்பு /செய்தி /இந்தியா / கேரளாவின் சிறப்புகளை மன் கி பாத் நிகழ்ச்சியில் பட்டியலிட்ட பிரதமர் மோடி…

கேரளாவின் சிறப்புகளை மன் கி பாத் நிகழ்ச்சியில் பட்டியலிட்ட பிரதமர் மோடி…

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

சபரி மலை ஐயப்பன் கோவில் குறித்து பெருமையுடன் பேசிய பிரதமர் மோடி, அங்கு தூய்மை அமைப்புகள் சிறப்பாக செயல்படுவதாகவும், மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கேரள மாநிலத்தின் சிறப்புகளை பிரதமர் நரேந்திர மோடி தனது மன் கி பாத் நிகழ்ச்சியில் பட்டியலிட்டு பாராட்டியுள்ளார். தேசிய அளவில் ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி கேரளாவின் சிறப்புகளை பல்வேறு மாநிலங்களுக்கு சென்று சேர்த்துள்ளது. மனதின் குரல் என்று பொருள்படும் மன் கி பாத் என்ற ரேடியோ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். ஒவ்வொரு மாதமும் கடைசி வார ஞாயிற்று கிழமைகளில்  இந்த நிகழ்ச்சி ரேடியோக்களில் ஒலிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ஏப்ரல் 30 ஆம் தேதி  அடுத்த வாரம் ஞாயிற்று கிழமையன்று மனதின் குரல் நிகழ்ச்சி 100 ஆவது பதிப்பை நிறைவு செய்கிறது.

இந்த நிகழ்ச்சிகளின்போது பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்கள் மற்றும் அங்கு வசிக்கும் மக்களின் சிறப்புகளை குறிப்பிட்டு பேசியுள்ளார். அந்த வகையில் கேரள மாநிலத்தின் சிறப்புகள் குறித்து மன் கி பாத் நிகழ்ச்சயில் பேசிய மோடி கேரளாவின் பாரம்பரிய மருத்துவம், தூய்மை, கல்வி உள்ளிட்டவை குறித்து பாராட்டியுள்ளார். சபரி மலை ஐயப்பன் கோவில் குறித்து பெருமையுடன் பேசிய பிரதமர் மோடி, அங்கு தூய்மை அமைப்புகள் சிறப்பாக செயல்படுவதாகவும், மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

கேரளாவில் என்.எஸ்.எஸ். அமைப்பின் சேவைகள், வேம்ப நாடு ஏரியில் பிளாஸ்டிக் பாட்டில்களை அகற்றிய ராஜப்பன், இடுக்கி மாவட்டத்தில் ஒரு ஆசிரியர் மற்றும் டீக்கடை உரிமையாளர் ஆகியோர் நிறுவிய நூலகம் உள்ளிட்டவற்றை மன் கி பாத் நிகழ்ச்சியில் பாராட்டி பேசியுள்ளார் பிரதமர் மோடி. பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்திற்கு கேரள பெயர் பெற்றுள்ளது.

top videos

    இதனை தனது மன் கி பாத் நிகழ்ச்சியில் புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி, கென்ய நாட்டின் முன்னாள் பிரதமா ரைலா ஒடிங்கா, கேரளாவில் சிகிச்சை எடுத்துக் கொண்டதை கூறியிருந்தார். ரைலா ஒடிங்கா கண் பார்வைக்காக ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டதை பிரதமர் மோடி கூறிய நிகழ்வு வரவேற்பை பெற்றது.

    First published:

    Tags: Mann ki baat, PM Modi