முகப்பு /செய்தி /இந்தியா / பயனுள்ள வகையில் பதவிக்காலம் அமையட்டும்: சித்தராமையாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

பயனுள்ள வகையில் பதவிக்காலம் அமையட்டும்: சித்தராமையாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

மோடி - சித்தராமையா

மோடி - சித்தராமையா

இந்த பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர்  பிரியங்காகாந்தி, மூத்தத் தலைவரான ராகுல்காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றுள்ள சித்தராமையாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கர்நாடகாவின் முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்றுக் கொண்டார். கர்நாடகா மாநிலம் பெங்களூர் கண்டீராவா (Kanteerava) மைதானத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில், ஆளுநர் தாவர் சந்த கெலாட் அவருக்கு பதவிபிரமாணம் செய்துவைத்தார்.

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராாக உள்ள சிவகுமார் துணை  முதல்வராக பதவியேற்றார். மேலும், எட்டு அமைச்சர்களும் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.

இந்த பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர்  பிரியங்காகாந்தி, மூத்தத் தலைவரான  ராகுல்காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜியின் அதிகார்ப்பூர்வ பிரதிநிதி, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தராம் எச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சித்தராமையாவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவில், ‘கர்நாடக முதலமைச்சராக பதவியேற்ற சித்தராமையா ஜி, துணை முதலமைச்சராக பதவியேற்ற டி.கே. சிவகுமார் ஆகியோருக்கு வாழ்த்துகள். பயனுள்ள வகையில் பதவிக்காலம் அமைய எனது வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Karnataka Election 2023, PM Modi