முகப்பு /செய்தி /இந்தியா / ''கலைகளை இந்த கலாசார மையம் ஊக்குவிக்கும்'' - நீடா முகேஷ் அம்பானிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

''கலைகளை இந்த கலாசார மையம் ஊக்குவிக்கும்'' - நீடா முகேஷ் அம்பானிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

முகேஷ் அம்பானி - நீடா அம்பானி - பிரதமர் மோடி

முகேஷ் அம்பானி - நீடா அம்பானி - பிரதமர் மோடி

கலை ஆர்வலர்களை இணைக்க இம்மையம் உதவட்டும் என நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய கலைகளை வளர்ப்பதற்கான உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் கலைஞர்களை அங்கீகரிக்கவும் மும்பையில் பிரம்மாண்டமாக 'நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையம் தொடங்கப்பட்டுள்ளது. மும்பை பந்த்ரா-குர்லா காம்ப்ளெக்ஸில் உள்ள ஜியோ குளோபல் சென்டரில் கலாசரா மையம் அமைந்துள்ளது. 4 அடுக்குகள் கொண்ட கட்டடத்தில், 2000 இருக்கைகள் கொண்ட திரையரங்கம், நவீன ஸ்டுடியோ, கலை நிகழ்ச்சிகளுக்கான அரங்கம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

தொடர்ந்து இசை, ஆடை அலங்கார கண்காட்சி, கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ தலைவர் ஆகாஷ் அம்பானி, அவரது மனைவி ஷோகலா மேதா, ரிலையன்ஸ் ரீட்டைல் தலைவர் இஷா அம்பானி அவரது கணவர் ஆனந்த் பிராமல், ரிலையன்ஸ் எனர்ஜி தலைவர் ஆனந்த் அம்பானி, அவரது வருங்கால மனைவி ராதிகா மெர்சென்ட் ஆகியோர் பங்கேற்றனர்

இந்த நிலையில் இந்தியாவின் நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையம் திறப்பு விழாவின் 3வது நாளில் இந்தியா இன் ஃபேஷன் என்ற பெயருடைய நூலை நீடா அம்பானி மற்றும் இஷா அம்பானி இணைந்து வெளியிட்டனர். இந்தியா சார்பில் இந்த நூலை ரிஸோலி என்பவர் எழுதியிருக்கிறார். இந்தியாவின் கலாச்சார ரீதியிலான உடைகள், டெக்ஸ்டைல் ஆகியை குறித்து பேசுகிறது. இந்த நூலில் ஃபேஷன் தொடர்பாக வரலாற்று ஆய்வாளர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள், ஃபேஷன் சார்ந்து இயங்கும் பத்திரிகையாளர்கள் ஆகியோரின் கருத்துக்களை கொண்டுள்ளது. மேலும் நிகழ்வில் இந்தியா இன் ஃபேஷன் என்ற பெயரில் கண்காட்சியையும் இருவரும் திறந்துவைத்தனர்

இந்த நிலையில் கலை மற்றும் கலாச்சாரத்தை வளர்ப்பதற்காக நீடா அம்பானியின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து பாராட்டு அறிக்கை வெளியிட்டுள்ள அவர், கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், அதனைப் பார்த்து நிறையே பேர் தங்களை அந்தக் கலைகளை ஈடுபடுத்திக்கொள்ளவும் ஊக்குவிக்கும் என நம்புகிறேன். இந்திய நாடானது கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கலாச்சாரம் மேம்பட்ட ஒரு நாடு. நம் முன்னோர்கள் விலைமதிப்பு மிக்க பொக்கிஷமான மொழி, இலக்கியம், விழாக்கள், கலை, கட்டிடக்கலை ஆகியவற்றை நமக்காக உருவாக்கியிருக்கிறார்கள்.

ஆரோக்கியம் முதல் சுற்றுச்சூழல் வரை பல்வேறு களங்களில் முழுமையான தீர்வை பெறும் நோக்கில் உலகமே இந்தியாவை உற்று நோக்குகிறது. இந்த நேரத்தில் இந்திய கலாச்சாரம் மற்றும் அதன் பல்வேறு வெளிப்பாடுகளான இசை, நடனம், சினிமா மற்றும் கலை போன்றவற்றுக்கு உலகளவில் வரவேற்பு கிடைத்துவருகின்றன. இதற்கு உத்வேகம் அளிக்க, நம் கலாச்சாரத்தை பிரபலப்படுத்தும் நிறுவனங்கள் முக்கியமானவை. இந்த உன்னத முயற்சியில் நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையம் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

top videos

    இந்த கலாச்சார மையம் நமது சமூகத்தில் உள்ள கலை மற்றும் கலாச்சாரத்தின் பெருமையை தேசத்திற்கும் உலகிற்கும் எடுத்துக்காட்டட்டும். நாடு முழுவதும் உள்ள மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள கலைஞர்கள் மற்றும் கலை ஆர்வலர்களை ஒன்றிணைக்க இந்த மையம் உதவட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    First published:

    Tags: Mukesh ambani, Narendra Modi, Nita Ambani