நிதி ஆயோக் அமைப்பின் நிர்வாகக் குழு கூட்டம் எட்டாவது முறையாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் கூடியது. கடந்த 2014ஆம் ஆண்டு திட்டக் கமிஷனுக்கு மாற்றாக நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டது. மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு நிதி வழங்கும் பணியையும் நிதி ஆயோக் அமைப்பே செய்து வருகிறது.
இதன் நிர்வாகக் குழுவில் மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேச ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளனர். இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார். இந்தக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி ஆயோக் அதிகாரிகள், பங்கேற்றனர். 2047ம் ஆண்டில் இந்தியாவை வல்லரசாக்குவது மைய கருவாக விவாதிக்கப்பட்டது.
பெண்கள் முன்னேற்றம், திறன் மேம்பாடு உள்கட்டமைப்பு, சுகாதாரம் உள்ளிட்டவை குறித்தும், அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாவின் வளா்ச்சியை வேகப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிப்பது, முதலீட்டை அதிகரித்தல், சமூக மேம்பாடு, ஊட்டச்சத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளதாகவும் நிதி ஆயோக் அமைப்பு தெரிவித்தது.
இதையும் படிங்க: ராஜஸ்தான் மணல்... உபி ஜல்லி... தமிழகத்தின் செங்கோல்... புதிய நாடாளுமன்ற கட்டத்தின் சிறப்புகள் என்ன?
மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் உடல்நலக் குறைவால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Niti Aayog, PM Modi