முகப்பு /செய்தி /இந்தியா / அதிகரிக்கும் உடலுறுப்பு தானம்... மன் கீ பாத் நிகழ்வில் பிரதமர் மோடி பெருமிதம்..!

அதிகரிக்கும் உடலுறுப்பு தானம்... மன் கீ பாத் நிகழ்வில் பிரதமர் மோடி பெருமிதம்..!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

mann ki baat pm modi | கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பண்டிகை காலத்தில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

  • Last Updated :
  • Delhi, India

மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் தொடர்ந்து உரையாற்றி வருகிறார். அந்த வகையில் மார்ச் மாதத்தின் கடைசி ஞாயிறான இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி சௌாராஷ்டிரா தமிழ் சங்கமம், தூய்மை இந்தியா திட்டம், பல மாநிலங்களின் கலாச்சார அம்சங்கள் குறித்து பேசினார்.

99ஆவது மனதின் குரல் நிகழ்ச்சில் பேசிய பிரதமர் மோடி கோவிட் பரவல் குறித்தும் எச்சரித்துள்ளார். அவர் கூறியதாவது, "இந்த மாதத்தில், நாம், ஹோலி தொடங்கி நவராத்திரி வரை, பல நிகழ்ச்சிகளிலும் பண்டிகைகளிலும் ஈடுபட்டு இருப்போம். ரமலான் புனித மாதமும் தொடங்கவிருக்கிறது. இன்னும் சில நாட்களில் ராம நவமி திருநாளும் வரவிருக்கிறது.

இதன் பிறகு மஹாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை ஆகியவையும் வரும். அதேவேளை, இப்போது சில இடங்களில், கொரோனா அதிகரித்து வருகிறது. ஆகையால் நீங்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும், தூய்மை பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஏப்ரல் மாதத்தில் நாம், பாரதத்தின் இரண்டு மாபெரும் ஆளுமைகளின் பிறந்த தினங்களைக் கொண்டாட இருக்கிறோம். இந்த இருபெரும் ஆளுமைகள் – மஹாத்மா ஜோதிபா புலே, பாபா சாஹேப் அம்பேத்கர் ஆகியோர் தாம். இந்த இரண்டு மாமனிதர்களும், சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளுக்கு முடிவு கட்ட, அசாத்தியமான பங்களிப்புக்களை தந்தனர் என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு - குஜராத் இடையே நூற்றாண்டு பிணைப்பு... பிரதமர் மோடி பெருமிதம்..!

top videos

    மேலும் அவர், 2013ஆம் ஆண்டிலே நமது தேசத்திலே, உடலுறுப்பு தானம் எனும் போது 5000த்திற்கும் குறைவான அளவிலே தான் இருந்தது; ஆனால் 2022ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை அதிகரித்து 15,000 என்ற எண்ணிக்கையைத் தாண்டி விட்டது. உடலுறுப்பு தானம் செய்யும் நபர்களும், அவர்களுடைய குடும்பங்களும், தங்கள் செயல் மூலம் உண்மையிலே மிகவும் புண்ணியமடைந்துள்ளனர் என்று கூறினார்.

    First published:

    Tags: Mann ki baat, PM Modi