முகப்பு /செய்தி /இந்தியா / 2025ம் ஆண்டுக்குள் காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி

2025ம் ஆண்டுக்குள் காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி

வாரணாசியில் நடைபெற்ற ஒரே உலக காசநோய் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி

வாரணாசியில் நடைபெற்ற ஒரே உலக காசநோய் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி

PM Modi At One World TB Summit | உலகளவில் 80 சதவீத காசநோய் மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதாக பிரதமர் மோடி பெருமிதம்

  • Last Updated :
  • Varanasi, India

2030ம் ஆண்டுக்குள் காச நோயை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், 2025ம் ஆண்டுக்குள் இந்தியாவில் காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ‘ஒரே உலக காசநோய் உச்சி மாநாடு’ நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ‘காச நோய் இல்லா பஞ்சாயத்து’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் , காசநோய்க்கு எதிரான இந்தியாவின் அணுகுமுறை உலகளாவிய திறனைக் கொண்டுள்ளது என்றும், உலகளவில் 80 சதவீத காசநோய் மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

top videos

    காசநோயை ஒழிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளதாக கூறியுள்ள பிரதமர், 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்' என்ற பார்வையை முன்னெடுத்த இந்தியா, தற்போது 'ஒரே உலக காசநோய் உச்சி மாநாடு' மூலம் உலகளாவிய நன்மைக்கான மற்றொரு தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

    First published:

    Tags: PM Modi, Varanasi