முகப்பு /செய்தி /இந்தியா / இந்தியா - வங்கதேசம் இடையே ரூ.377 கோடி மதிப்பில் 125 கிமீ நீள எரிசக்தி குழாய் - தொடங்கி வைத்த மோடி, ஷேக் ஹசீனா

இந்தியா - வங்கதேசம் இடையே ரூ.377 கோடி மதிப்பில் 125 கிமீ நீள எரிசக்தி குழாய் - தொடங்கி வைத்த மோடி, ஷேக் ஹசீனா

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவுடன் பிரதமர் மோடி

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவுடன் பிரதமர் மோடி

இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு 1 மில்லியன் மெட்ரிக் டன் அதிவேக டீசலை வங்கதேசத்திற்கு கொண்டு செல்லும் திறன் கொண்ட எரிசக்தி குழாய் திட்டத்தை இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக தொடங்கி வைத்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

இந்தியா- வங்கதேச நாடுகளுக்கு இடையே மின்சாரம் மற்றும் எரிசக்தித்துறையில் ஒத்துழைப்பு மற்றும் கூட்டுறவு உருவாக்கும் விதமாக ரூ.377 கோடி ரூபாய் மதிப்பில் 125 கிமீ நீள எரிவாயு குழாய் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இந்தியா- வங்கேதச நட்புறவு குழாய் திட்டத்தை (IBFP) பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் இணைந்து மெய்நிகர் முறையில் திறந்து வைத்தனர். இந்தக்குழாய் அமைப்பதற்கான அடிக்கல் 2018 செப்டம்பரில் இரு நாட்டு பிரதமர்களாலும் நாட்டப்பட்டது.

இது இந்தியாவிற்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையிலான இரண்டாவது எல்லை தாண்டிய எரிசக்தி குழாய்த்திட்டம் ஆகும். ஆண்டுக்கு 1 மில்லியன் மெட்ரிக் டன் அதிவேக டீசலை வங்கதேசத்திற்கு கொண்டு செல்லும் திறன் கொண்டது இந்த எல்லை தாண்டிய எரிசக்தி குழாய்த் திட்டம்.

இரு நாட்டு உறவுக்கு இடையே இது புது சகாப்தம். இரு தரப்புக்கும் இடையே உள்ள மக்களுடனான தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வங்கதேசம் இந்தியாவின் முதன்மையான வளர்ச்சி கூட்டாண்மை நாடாகவும், பிராந்தியத்தில் அதன் மிகப்பெரிய வர்த்தக பங்குதாரராக உள்ளது.

இதையும் படிங்க: கோவை இயற்கை விவசாயி பாப்பம்மாள் காலில் விழுந்து ஆசிபெற்ற பிரதமர் மோடி..!

நட்புக் குழாய் இயக்கமானது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் எரிசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்துவதோடு வங்கதேசத்தில் குறிப்பாக விவசாயத் துறையில் மேலும் வளர்ச்சியை அதிகரிக்கும் என அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தில் தொடர்ந்து வழிகாட்டியதற்காக பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், இரு நாட்டு மக்களின் நலனுக்காக அவருடன் தொடர்ந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார்.

First published:

Tags: Bangladesh, PM Modi