முகப்பு /செய்தி /இந்தியா / தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா... பிரதமர் மோடி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா... பிரதமர் மோடி அறிவிப்பு!

ஜவுளி துறை

ஜவுளி துறை

PM MITRA mega textile parks : PM MITRA ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காக்களைத் தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, உ.பி.யில் உள்ளிட்ட மாநிலங்களில் அமைப்பதற்கான அறிவிப்பைப் பிரதமர் பதிவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

PM MITRA திட்டத்தில் மூலம் தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், உ.பி., மற்றும் எம்.பி., ஆகிய மாநிலங்களில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காக்களை அமைக்க ரூ.4,445 கோடியை ஒதுக்கி பிரதமர் மோடி ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காக்கள் ஜவுளி துறையை 5F (Farm to Fibre to Factory to Fashion to Foreign) என்ற பார்வையில் மேம்படுத்த உதவும் என்று தெரிவித்துள்ளார். இந்த ஜவுளி பூங்காக்கள், துறை சார்ந்த அதிநவீன உள்கட்டமைப்பை அமைத்துத் தரும், கோடிக்கணக்கில் முதலீடுகளை ஈர்க்க உதவும் மற்றும் அதிகளவில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் என்று கூறியுள்ளார்.

Also Read : பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர் என்று கூறவே இல்லை - நோபல் பரிசு கமிட்டி துணைத்தலைவர் மறுப்பு

தொடர்ந்து, ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காக்கள் ”மேக் இன் இந்தியா” மற்றும் ”மேக் ஃப் த வால்டு” ஆகியவற்றுக்குச் சிறந்த உதாரணமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: PM Modi, Textiles