முகப்பு /செய்தி /இந்தியா / சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்பு - பிரதமர் மோடி

சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்பு - பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

எதிர்பார்ப்போடு வந்த மக்களை தமிழ்நாடு இருகரம் நீட்டி வரவேற்றதுடன் அவர்களது புதுவாழ்வுக்கான அனைத்து வசதிகளையும், செய்து கொடுத்து இருப்பதையும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்

  • Last Updated :
  • Tamil Nadu |

வேற்றுமையில் ஒற்றுமை, மொழிகள், கலை, கலாசாரங்களை கொண்டாடும் சிறப்பு மிக்கவர்கள் இந்தியர்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தமிழ்சங்கமம் என்ற நிகழ்ச்சி கடந்த 17ஆம் தேதி, குஜராத் மாநிலம் சோம்நாத்தில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ரயில்கள் மூலம் சோம்நாத் சென்றடைந்தனர். 10 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. இந்நிலையில், நிகழ்ச்சியின் நிறைவில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார். சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களை வருக வருக என்று வரவேற்கிறேன் என பிரதமர் மோடி தமிழில் வரவேற்றார்.

சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் என்பது வெறும் குஜராத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் மட்டுமான பந்தமல்ல என்றும், பகவான் சோம்நாத்துக்கும் ராம்நாதருக்குமான பந்தம் என்றார். இதேபோல் குஜராத்தின் தாண்டியாவுக்கும் தமிழ்நாட்டின் கோலாட்டத்துக்கும் இடையாயான பந்தம் என்றும் கூறினார். தமிழ்நாட்டில் இருந்து சோம்நாத்துக்கு வந்திருந்தவர்கள், குஜராத்தை விட்டு செல்லும்போது தங்கள் மூதாதையர்கள் குறித்த நல்ல நினைவுகளை எடுத்துச் செல்வர் என்றும் பிரதமர் மோடி பேசினார்.

தாம் முதலமைச்சராக இருந்த போது 2010-ம் ஆண்டு மதுரையில் இதுபோன்ற சவுராஷ்டிரா தமிழ் சங்கமத்திற்கு ஏற்பாடு செய்ததாகவும், அதில் சவுராஷ்டிராவில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றதாகவும் பிரதமர் நினைவு கூர்ந்தார். அதேபோன்று, தற்போதைய சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்பு என்றும் தெரிவித்தார்.

இந்தியாவைப் பொறுத்தவரை மக்கள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு இடம்பெயரும்போது, அந்த மாநிலத்தின் மொழி, மக்கள் மற்றும் சூழ்நிலை குறித்து, ஒருபோதும் கவலைப்படமாட்டார்கள் என்று குறிப்பிட்ட பிரதமர், சௌராஷ்ராவிலிருந்து ஏராளமானோர் தமிழ்நாட்டிற்கு இடம்பெயர்ந்து இருப்பதையும் நினைவுகூர்ந்தார்.

இதையும் வாசிக்க: "ஆபரேஷன் காவேரி" மீட்புப் பணிக்கு தமிழக அரசு உதவ தயார்- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

நாம் செல்லும் மாநிலம் நம்முடைய நம்பிக்கை மற்றும் அடையாளத்தைப் பாதுகாக்கும் என எதிர்பார்ப்போடு வந்த மக்களை தமிழ்நாடு இருகரம் நீட்டி வரவேற்றதுடன் அவர்களது புதுவாழ்வுக்கான அனைத்து வசதிகளையும், செய்து கொடுத்து இருப்பதையும் சுட்டிக்காட்டினார். இதுவே ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற கொள்கைக்கு மிகச்சிறந்த உதாரணம் என்றார் பிரதமர்.

top videos

    கலாசார மோதலை ஊக்குவிக்கக் கூடாது என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட நினைவுப்பரிசியில் திருவள்ளுவர் காவி உடையில் இருப்பது போல சித்தரிக்கப்பட்டிருந்தது.

    First published:

    Tags: Narendra Modi, Saurashtra Tamil Sangamam