கர்நாடகா தேர்தலில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி வெற்றி வாய்ப்பை பெற்றுள்ளது.
கடந்த மே 10ஆம் தேதி கர்நாடகா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்ததேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி 130 இடங்களுக்கு மேல் முன்னிலையுடன், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனநிலையில் உள்ளது. பிற்பகல் 2 மணி நிலவரப்படி, பாஜக 65 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்த வெற்றிக்கு ராகுல் காந்தியை பாராட்டி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பதிவிட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
இதையும் படிக்க : “மக்களின் காலை தொட்டு வணங்குகிறேன்...”- டி.கே.சிவக்குமார் உருக்கம்..!
விராட் கோலி தனது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். மற்ற விளையாட்டு வீரர்கள் சிறப்பாக விளையாடியதற்காகவும், அவர்களின் பிறந்தநாட்களுக்கும் அவர்களுக்காக இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வைக்கும் வழக்கமுடையவர்.
இன்று கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்காக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு விராட் கோலி பாராட்டுக்களை தெரிவிப்பதாக தகவல் பரவி வருகிறது. இது குறித்து ஆராய்ச்சி செய்ததில், இது போலி என தெரிய வந்துள்ளது.
இப்படி பரப்பப்படும் அனைத்து ‘படங்களும்’ சரியாக 17ஆவது நிமிடத்தில் ஸ்கிரீன் ஷாட் எடுத்ததை காண முடிகிறது. எனவே ஒரே போலியான படம் தான் இணையத்தில் பரவி வருகிறது என்பதை அறிய முடிகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.