உத்தரப் பிரதேசத்தில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை வாங்க மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள், வாகனத்தில் நிரப்பிய எரிவாயுவை குழாய் மூலம் மீண்டும் வெளியே எடுத்துள்ளனர்.
உத்தரப் பிரதேசம் ஜல்காவூன் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்கில், வாடிக்கையாளர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்திற்கு எரிவாயு நிரப்பியுள்ளார். அதற்கு, 2000 ரூபாய் நோட்டை அவர் கொடுத்துள்ளார். ஆனால் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் 2000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்துள்ளனர்.
यूपी के जालौन में पेट्रोल पंप पर 2000 का नोट दिया
कर्मचारियों ने नोट लेने से मना कर दिया। बाद में डाला पेट्रोल भी टंकी से निकाल लिया
वीडियो सोशल मीडिया पर हुआ वायरल pic.twitter.com/mpuvb2usEd
— Nigar Parveen (@NigarNawab) May 22, 2023
வாடிக்கையாளரும் தன்னிடம் வேறு பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து வாகனத்தில் நிரப்பிய எரிவாயுவை ஊழியர்கள் குழாய் மூலம் வெளியே எடுத்துள்ளனர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Petrol, Uttar pradesh