முகப்பு /செய்தி /இந்தியா / ராகுல்காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு...!

ராகுல்காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு...!

ராகுல் காந்தி - உச்சநீதிமன்றம்

ராகுல் காந்தி - உச்சநீதிமன்றம்

மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலும், மேல்முறையீட்டுக்கான கால அவகாசத்தை கொடுக்காமல் பதவியை பறிக்கக் கூடாது என மனுவில் கோரிக்கை.

  • Last Updated :
  • Delhi, India

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டணை விதித்தது. இதையடுத்து ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முரளிதரன் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில்,  “மக்கள் பிரதிநிதிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டதும் தகுதி நீக்கம்  செய்யப்படும் சட்டப்பிரிவை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலும், அவர்களுக்கு மேல்முறையீட்டுக்கான கால அவகாசத்தை கொடுக்காமல் அவரின் பதவி பறிக்கப்படக் கூடாது என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 8(3)-க்கு எதிராக இந்த  வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Congress, Delhi, Rahul Gandhi